அந்த பிரபாகர் அவளின் பியான்ஸி அவன் இவளை தேடுவானோ? விடைதான் கிடைக்கவில்லை. தன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தனக்கு ஒன்றும் தெரியாது என்று இந்தரிடம் சொல்ல வெகுவாக அவமானமாக உணர்ந்தாள் எனவே அமைதியாக இருந்தாள்.
’மிஞ்சிப் போனால் இவனுடன் பயணிக்க போவது சில நிமிடங்கள் அதற்காக ஏன் என் வாழ்க்கையை இவன் முன் கடை பரப்ப வேண்டும்?’ என்று எண்ணினாள்.
ஓரிரு முறை அந்த பிரபாகரனின் எண்ணை முயன்றவன் “நாட் ரீச்சபிள்னு காண்பிக்குது, கொஞ்ச நேரம் கழிச்சு ட்ரை பண்ணி பார்க்கிறேன்” என தன் மொபைலை பையில் வைத்துக் கொண்டான்.
டாக்ஸியை பார்த்து அந்தேரி விலாசம் சொல்லி அமர்த்தியவன் அவள் உள்ளே அமர்ந்ததும் பை சொல்லி கதவை அடைக்க முயன்றான். கடைசி நிமிடத்தில் என்னானதோ? கதவை சரேலென திறந்து அவளோடு உள்ளே அமர்ந்தான்.
“பாய்சாப் ஜல்தி காடி நிகாலியே” (உடனே வண்டியை எடுங்கள் அண்ணா)
அவன் முகத்தைப் பார்த்தவள் ஏதோ சரியில்லை என எண்ணியவளாய்
“என்னாச்சு?” என்றாள்.
அவன் திரும்பியே பாராமல் பின்னால் விரலை சுட்டிக் காண்பித்தான்.
டாக்ஸியின் பின் ஜன்னலைப் பார்த்தவள் அதிர்ந்தாள். அதே ஐவர் தூரத்தில் இவர்களை துரத்திக் கொண்டு வந்திருந்தார்கள்.
வண்டி வேகமெடுக்கவே அதில் ஒருவன் பிஸ்டலை எடுத்து வண்டியை குறி வைத்தான். வண்டி வளைவில் திரும்பவே விஷ்க் கென குறி தவறி அந்த வெற்று மூலையில் பாய்ந்தது.
கிடுகிடுவென நடுங்கி , முகம் வெளிறி டாக்ஸிக்குள் பதுங்கி அமர்ந்திருந்தாள் ரிஷா.
தொடரும்


Leave a Reply