அத்தியாயம் 6 _ துரத்தும் நிழல்கள்_ஜான்சி

அத்தியாயம் 6
அத்தியாயத்திற்குள்ளாக செல்லும் முன் மும்பை இரயில்வே குறித்த சிறு குறிப்பேடு:
மும்பை இரயில் சேவையானது சென்ட்ரல் (central), வெஸ்டர்ன் (Western) & சபர்ப் (Suburb) எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பொதுவாக ஒப்பிடுகையில் வெஸ்டர்ன் ரயில்வே சேவைகள் மிக துரிதமானவை அது போலவே அங்கே கூட்டமும் அதிகம். வெஸ்டர்ன் பகுதிகளில் உள்ள அந்தேரி, மாஹிம், பாந்திரா பகுதிகள் அதிக மாடர்னாக அறியப் படுபவை திரைப்பட நட்சத்திரங்கள் வீடுகள் இந்த பகுதிகளில் தான் அமைந்துள்ளன. இங்கே அமைந்திருக்கும் ஜுஹீ பீச் மிகவும் பிரபலமானது.
செண்ட்ரல் பகுதிகள் வெஸ்டர்னுக்கு அடுத்தாற் போன்ற நிலைக் கொண்டது தமிழர்கள் அதிகமாக வசிக்கும், குட்டித் தமிழகம் என அழைக்கப் படும் தாராவி பகுதி அமைந்துள்ள சயான் ஸ்டேஷன், மாதுங்கா ஸ்டேஷன் செண்ட்ரலில் உள்ளது. சபர்ப் மூன்றாம் வகையாகும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் செம்பூர் பகுதி சபர்பில் உள்ளது. இது போக தமிழர்களை எல்லாவிடமும் காணவியலும் என்பதையும் குறிப்பிட்டு விடுகின்றேன்.
இவை மூன்றும் அதாவது Western Railway, Central Railway & Suburban Railway ஒன்றிணையும் தாதர் (DADAR) பகுதி மிகவும் பிரபலமான இடமாகும். மும்பையில் மக்கள் இடையறாது ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு பயணிப்பதை எப்போதுமே காணலாம். செண்ட்ரலில் உள்ளவனுக்கு எதற்காக வெஸ்டர்னில் வேலை கிடைக்கிறது? வெஸ்டர்னில் உள்ளவனுக்கு ஏன் சபர்பனில்ல் வேலை கிடைக்கிறது. எதற்கு எல்லோரும் தாங்கள் இருக்கும் இடத்தில் வேலைக் கிட்டாமல் ஓட்டமாய் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது எவருக்குமே புரியாததொரு புதிர்.
செண்ட்ரல் இரயில்வேயின் ஆரம்பம் சி எஸ் டி எனப்படும் “சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்” (CST Chatrapathi Shivaji Terminus) {முன்னர் விக்டோரியா டெர்மினஸ் (Victoria Terminus) என்று அழைக்கப்பட்ட இரயில்வே நிலையம் இது தான்} ஆகும்.
வெஸ்டர்ன் இரயில்வேயின் ஆரம்பம் சர்ச்கேட் (Churchgate) ஆகும். இரண்டு இரயில் நிலையங்களையும் இடையே ஆன தூரத்தை (CST & Churchgate) எளிதாக பஸ் துணையாலோ அல்லது சில மணித்துளிகள் நடைப் பயணத்தாலோ அடைந்து விடலாம். அவ்வளவுக்கு அவ்வளவு ஒன்றுக் கொன்று அருகாமையில் உள்ளன.
எப்போதும் பரபரப்பான பகுதிகளுள் இவைகளும் உண்டு (CST & Churchgate) . பல தனியார் மற்றும் அரசு அலுவகங்களின் உயர் அதிகார மையங்கள் இங்கு காணப் படுகின்றன. எல் ஐ சி, ஏர்லைன்கள் இவற்றின் மும்பை அளவில் தலைமையக அலுவலகங்களும் இங்கே அமைந்திருக்கின்றன.
சர்ச்கேட்டிலிருந்து அருகாமையில் மரீன் ட்ரைவ் எனப்படும் பிரபலமான கடற்கரைச் சாலையும், வான்கடே ஸ்டேடியமும் இன்னும் பிரபலமான பலவும் அமைந்திருக்கின்றன.


Leave a Reply