Epi 12_ Manam Virumbudhe unnai unnai_Jansi

ஆனால், இப்போது இதனை யாரிடம் போய் பகிர்ந்துக் கொள்வாள்? தனது அத்தனை குழப்பங்களையும் கொட்டிக் கவிழ்த்து அதற்கு விடைகளை பெற்றுக் கொள்ளுகின்ற அத்தானே இப்போது அவளுக்கு அந்நியனாகி நிற்க அவனால் அல்லது அவனே அவளின் பிரச்சனையின் முகாந்திரமாகிப் போக அவள் யாரிடம் சொல்வதாம்? எதைக் கேட்பதாம் ஊமையாகிப் போனாள்.

“என் வீடும் நல்லா இருக்கு தானே?” விகாஷ் கேட்க நினைவிற்கு வந்தாள்.

“ஆமாண்ணா” 

“அப்ப ஆனந்துக்கு உதவி செய்ததை போல எனக்கும் செய்வ தானே? என் வீட்டையும் கட்டித் தருவ தானே?” 

“அதெப்படி? அடுத்த மாசம் நான் வேலைக்கு ஜாயின் ஆகணும்” தடுமாறினாள்.

“இது நியாயமா பூர்ணா? உங்க அத்தானுக்குன்னா உதவி செய்வ? இந்த அண்ணனுக்கு செய்ய மாட்டியா?”

அவள் திகைத்து விழித்துக் கொண்டு இருக்கையிலேயே ஆனந்த் கதவை திறந்து உள்ளே வந்தான்.

“என்னடா என் பாப்புவை மிரட்டுற ஆங்க்?” ஆனந்த் தன் நண்பனை அதட்ட, அவன் மீது சம்பூர்ணாவின் கண்கள் எதையோ தேடுவதை போல பதிந்தன.

தொடரும்

Pages: 1 2 3 4 5

error: Content is protected !!