புரியாமல் வெளியில் வந்து நின்றவளிடம்,”உன் வீட்டுக்கு கூப்பிட மாட்டியா ஆலிஸ்” என்றான்.அக்கம் பக்கம் அடையாளம் பார்க்க, பல வருடங்கள் கழித்து வந்ததால் மாற்றங்கள் மனதில் பதிய நேரம் எடுத்தது.
‘அது எரிந்து சாம்பலாய் கிடந்த அவளது வீடா?’ ஏதோ உணர்வில் அவளுக்கு நெஞ்சடைத்தது. உன் தம்பிதான் எல்லா உதவியும் கூடவே வந்துக் கொண்டிருந்த அவள் ஒன்று விட்ட சித்தி மகன் ஜேம்ஸை முன்னிருத்தினான்.
“தம்பி, கல்யாணத்துக்கு நான் அழைச்சப்பக் கூட சொல்லவே இல்லையேடா” உணர்ச்சிவசப்பட்டிருந்தாள்.
“அதென்ன என் வீடு அப்ப இது நம்ம வீடு இல்லையா?” கணவனை கடிந்தாள்.
“எல்லோரும் வாங்க போவோம்” அனைவரோடு இணைந்து உள்ளே நுழைந்தாள்.
அளவான வீடு, வீட்டின் வேலைகள் இன்னும் நிறைவுற்றிருக்கவில்லை. முன்னறை அடுத்து மற்றொரு அறை அது பூட்டப்பட்டு இருந்தது. அவைகளை மட்டும் அவசரமாக முடித்திருந்தார்கள் போலும் அங்கங்கே பூச்சுக்கள் பூசப் படாமல் இருந்தன.
“தேங்க்ஸ்டாமா” தம்பி கையைப் பிடித்துச் சொன்னாள்.
“உனக்கு கல்யாணம் ஆனது எனக்கு ரொம்ப சந்தோஷம்கா, உங்க வீட்ல எல்லோரும் ரொம்ப நல்லவங்க.”
“ஆமாம்டா” தலையசைத்தவள் ஜேம்ஸின் மனைவி பின்னோடு வந்து நிற்க அவளிடமிருந்த குழந்தையை வாங்கிக் கொஞ்சினாள்.
“மதினி அடுத்த மாசம் குழந்தைக்கு பிறந்தநாள், கட்டாயம் வாங்க” சரி என தலையசைத்தாள்.
கணவன், மாமியார், மாமனார், நாத்தனார் எல்லோரும் அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். அவள் அன்று அங்கு வருவதே அவளுக்குத் தெரியாமல் இருக்க, எதை செய்வது? எதை செய்யாமலிருப்பது? உபசரிப்பது எப்படி? என ஒன்றும் புரியாமல் திருதிருத்தாள். உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து சந்தித்து சென்றனர். பிரனீத் ஏற்பாடு செய்தபடியே வருகின்றவர்களுக்கு உபச்சாரம் குறைவில்லாமல் நடந்தது.அவளது உறவுமுறை அக்காக்கள் வந்து அவளுக்கு உதவினர்.
வருடக்கணக்காக ஊர் பக்கம் வராதிருந்தவள் புதர் மண்டிப் போயிருந்த வீட்டை திடீரென எடுத்துக் கட்டவும் அவளைப் பார்க்க அனைவருமே ஆவலாக இருந்தனர். குறிப்பாக அவள் பெற்றோர்கள் அன்பால் கூட்டிச் சேர்த்த உறவுகள் அனைத்தும் அவளைப் பார்க்கத் திரள, ஒன்றிரண்டு மணி நேரம் அந்த தெரு அல்லோலப்பட்டது.
மூதாட்டிகள் பிரனீத்துடனும் அவன் பெற்றோருடனும் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் திருமண வரவேற்பிற்கான அழைப்பிதழை ஏற்கெனவே ஜேம்ஸ் மூலமாக சொந்தங்களுக்கு கொடுத்திருக்க திருமண மண்டபம் களைக்கட்டி இருந்தது.
“பிரனீத் ஏதோ ப்ளான் வச்சிருக்கானாம்” அத்தைக் கூறும் முன்பு
“இன்னுமா?” ஆலிஸ் அதிர, தாருணி சிரித்தாள்.
“ஆமாம், அதனால நாங்க அப்படியே ஒரு சில இடங்களுக்கு ஊர் சுத்திட்டு இரண்டு நாளில் வீட்டுக்கு போயிடுவோம். நீங்க நல்லா சுத்திட்டு வாங்க”
“அண்ணி ஹனிமூன்…” காதில் கிசுகிசுத்தாள் சின்னவள்.
“போடி… “ முகம் சிவந்தே கிடந்த்து.
ரிசப்ஷன் முடிய ஹாலில் இருந்தே மாமனார், மாமியார் தாருணி மூவரும் விடைப் பெற்றனர்.
“நாம இனி எங்கே போறோம்?” ஹாலில் தனித்து இருக்கையில் விசாரித்தாள் வழக்கம் போல பதிலளிக்காமல் அவன் தவிர்க்க, எதிரில் ஜேம்ஸீம் மற்ற சகோதரர்களும் வந்துக் கொண்டு இருந்தனர்.
“மறுபடி இத்தனை கிஃப்டா?” மலைத்தாள்.
“உங்கம்மா அப்பா செய்தது எல்லாம் அவங்களும் திருப்பி கொடுக்கணும்ல?”
அம்மா அப்பா நினைவில் முகம் மலர்ந்தது. ‘இன்னிக்கு அம்மா அப்பா இருந்திருந்தா சந்தோஷப்பட்டு இருப்பாங்கள்ல?” “ம்ம்” பதிலளித்தான்.

