‘சின்ன பிள்ளை அவள்…எதிலும் படபடப்பு, பரபரப்பு, உடனடியாக எதையாவது
முடிவு எடுத்துக் கொண்டு விடுவாள்’ என சிந்தனைகள் ஓட, பாப்புவின் செய்திகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டே வந்தவன் தனது அறைக்குள் நுழைந்ததும் படுக்கையில்
சரிந்தான்.தனது எண்ணங்களில் ஆழ்ந்தவனாக இருந்த அவனுக்கு சிறிது நேரம்
கழித்தே அந்த குரல் கேட்டது.
“Aiuto, Sono chiuso dentro al bagono”(ஹெல்ப் ஹெல்ப் நான் பாத்ரூமில்
மாட்டிக்கொண்டேன்)
“puoi aiutarmi per favore?”(எனக்கு உதவ முடியுமா ப்ளீஸ்)
என்ன நிகழ்கின்றது என புரிவதற்கே ஆனந்த் சில நொடிகள் எடுத்துக் கொண்டான்.
‘எனது பாத்ரூமில் யாரது?’மனத்திற்குள்ளாக கேள்வி எழ
“எவன் டா அவன்?” வாய்விட்டே கேட்டிருந்தான்.மறுபடியும் குரல் கேட்டது.எதிர்முனையில் இருந்து பதில் வராததால் கடுப்பாகியவன் கத்தினான்
‘chi è questo (யாரது?)”
“மச்சான் நீ வந்துட்டியா மச்சான்?”உள்ளே குரல் எழுப்பியவனிடம் இருந்தது ஆசுவாசமே.
“விகாஷ் இஸ் திஸ் யூ ?” ஆனந்த் அவசரமாக போய் பாத் ரூம் கதவை திறந்தான்.
“யப்பா சாமி நல்ல வேலை நீ வந்த, இரண்டு மணி நேரமா நான் டாய்லெட்க்கு உள்ள மாட்டிக்கிட்டு பட் ட பாடு”
“மொபைலில் கால் செய்ய வேண்டியது தானேடா?”
“அவசரமா உள்ளே போனதில் மொபைல் வெளியே விட்டுட்டேன்டா”
“…”
“கதவை திறக்குற சத்தம் வரவும் உன் மெய்ட்தான் வந்திடடாங்கன்னு நினைச்சு
இத்தாலியனில் கத்தினேன்.”
“ம்ம் சரி வா உனக்கு ஏதாச்சும் சாப்பிட தரட்டுமா?”
“வேணாம் டா நான் என் ரூம்க்கு போய் சாப்பிட்டுகிறேன், நீ ரெஸ்ட் எடு. நீ
தந்து விடட பேப்பர்ஸ் எல்லாம் ட்ராவில் வச்சுட்டேன். பார்த்துக்கோ?”
“சரிடா” என்றவனாக அவன் கதவை மூட முயலும் போது விகாஷ் அவனிடம் நினைவு படுத்தினான்.

