அத்தியாயம் 7_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 7
ஃபேஷன் உலகில் ஐந்து முக்கிய நிகழ்வுகள் உள்ளன, அவைகள் பாரிஸ் ஃபேஷன் வீக், மிலன் ஃபேஷன் வீக், நியூயார்க் ஃபேஷன் வீக், லண்டன் ஃபேஷன் வீக் மற்றும் அரபு ஃபேஷன் வீக் ஆகியவைகளாகும்.
இவைகளுள் மிகவும் பிரபலமான ஃபேஷன் வாரங்களில் வான்கூவர் ஃபேஷன் வீக், விவ்ஸ் வேர்ல்ட் ஃபேஷன் வீக், ரஷ்யாஃபேஷன் வீக் ஆகியவையும் அடங்கும்.உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அல்லது வருடத்திற்கு இரண்டு முறைகள் பேஷன் வாரங்கள் எனும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இருபத்தியோராம் நூற்றாண்டில் ஃபேஷன் காட்சி பல துருவங்களாக மாறினாலும், பெர்லின்,லாஸ் ஏஞ்சல்ஸ், மாட்ரிட், ரோம், சாவோ பாலோ, ஷாங்காய், மும்பை மற்றும் டோக்கியோ போன்ற பிற மையங்கள் முக்கியமான ஃபேஷன் வாரங்கள் மற்றும் பிற நிகழ்வுகளை நடத்துகின்றன.
மிலன் ஃபேஷன் வீக் ஒவ்வொரு சீசனிலும் 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை
உள்ளடக்கி, நகரத்தை ஒரு சுற்றுலா மையமாக மாற்றுகிறது, மேலும்
நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு இடங்களை உருவாக்கி, Palazzo Reale, Palazzo
Serbelloni போன்ற மிகவும் நேர்த்தியான மற்றும் செல்வாக்குமிக்க
அரண்மனைகளைத் தேர்ந்தெடுத்து வடிவமைப்பிற்கான மேடையாக மாற்றுகிறது.
மிலன் ஃபேஷன் வீக் (Italian: Settimana della moda) என்பது இத்தாலியின்
மிலனில் அரை ஆண்டுதோறும் நடைபெறும் ஆடை வர்த்தகக் கண்காட்சி ஆகும்.
இலையுதிர்/குளிர்கால நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி/மார்ச் மாதங்களில்
நடைபெறும், மேலும் வசந்த/கோடை நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும்
செப்டம்பர்/அக்டோபரில் நடைபெறும்.
ஆனந்த் தனது பல வருட கனவை நினைவாக பார்க்க வேண்டிய தருணத்தில் இருந்தான்.தற்போது பிப்ரவரி மாதத்திற்கான தனது ஃபேஷன் ஷோ வேளைகளில் இரவு பகலாக உழைத்துக் கொண்டு இருந்தான்.
இந்த பெப்ருவரி ஃபேஷன் ஷோ அடுத்து செப்டெம்பர் மாதத்தில் நிகழவிருக்கும்
ஃ பேஷன் ஷோ நிகழ்வில் ஒன்றை தான் முன்னின்று நடத்துவதாக இருந்ததால் தனது பல வருட கனவு கை கூடும் தருணம் என ஆனந்த் மிக மகிழ்வாக இருந்தான்.

