“இங்க சென்னை மாதிரியே பெங்களூர்லயும் ஸ்டாப் எல்லாம் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க….உனக்கு அவ்வளவு வித்தியாசமா தெரியாது”
ஒருமைக்கு மாறி இருந்தான்… அவளுக்கென்னவோ அவளது கனவில் வருகையில் பிரனீத் பேசுவானே அது போலத் தோன்றியது. இது கனவு தானோ? வெகுவாகக் குழம்பினாள். அவன் கூறியதில் கவனம் வைத்தவள்…
“சரி நான் ஏன் பெங்களூர் ஸ்டாப் பத்தி கவலைப் படணும், அவங்க எப்படி இருந்தா என்ன? எனக்கு ஏன் வித்தியாசமா தெரியணும்?” எதற்காக இதையெல்லாம் என்னிடம் சொல்கிறான்?
இங்க உன் மேனேஜர் உனக்கு பதிலா பேக் அப் (back up) ரெடியானதுனால எதுவும் பிரச்சினை செய்ய வாய்ப்பில்லை…
‘பேக் அப்?? அப்ப புனிதா என் பேக் அப்பா?’ சற்று சுரணை வந்தது.
‘நான் ஏற்கெனவே உங்க டிபார்ட்மெண்ட் லீட் கிட்ட கேட்டுட்டேன், இங்க இருந்தா என்ன? இல்ல வேற பிராஞ்ச்ல இருந்தா என்ன? எங்களுக்கு ஒண்ணும் பிரச்சினையில்லன்னு சொன்னாங்க.’
‘###@@………….. ‘என்னது? என்னைச் சுற்றி என்ன நடக்குது?’ மனதிற்குள்ளாகப் போட்டு உழன்றாள், புதிரை விடுவிக்க அவள் மனம் போராடிக் கொண்டு இருந்தது.
“நீ பெங்களூர் வர்றதைப் பத்தி நிறைய பேருக்கு ரொம்ப சந்தோஷம், குறிப்பா ராகவன் சாருக்கு … உன்னோட டீம் ஹேண்ட்லிங்க் ஸ்கில்ஸ் அவ்வளவு பிரசித்தம்….”
???………….வாட்?
“அம்மா கூட ஏண்டா என் மருமவ வேலைக்கு போகணும்? வேண்டாம்டான்னு சொன்னாங்க…..”
——-
“நான் தான் சொன்னேன் அவளுக்கு வேலைப் பார்க்கிறதுல அவ்வளவு ஆர்வம் அம்மா, அவளை தடைச் செய்ய கூடாதுன்னு…”
——
இப்படி தன்னை பேசவே விடாமல், விளக்கமாய் எதையும் சொல்லாமல் ஒன் வேயில் (one way) வேகமாக பயணித்துக் கொண்டிருந்த பிரனீத்தை எப்படி நிறுத்துவதெனப் புரியாதவளாக ஆலிஸ் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். பிரனீத்தோ அவள் எதிர்பாராத நேரம் சட்டென்று அவள் கையைப் பிடித்து தன் பக்கமாக இழுத்திருந்தான். இழுத்த வேகத்தில் திரும்பி நடந்த விதத்திலேயே அவன் மீது தன் முதுகு இடிக்க நின்றாள்.


Leave a Reply