அத்தியாயம் 9_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி

அத்தியாயம் 9
ரிஷாவும், இந்தரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.
இந்தர் ரிஷா கூறியவற்றை அசைப் போட்டவாறு இருந்தான். அவன் மனதில் ஒருவிதமான பயம் சூழ்ந்திருந்தது. தனக்கு ஒரு ஆபத்து என்று இருந்த போது கூட அவனுக்கு அத்தகைய ஒரு எண்ணம் தோன்றி இருக்கவில்லை. எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில்தான் இருந்தான். ஆனால், தன் எதிரில் ஒருவளின் உயிரைப் பறிக்க இத்தனை பேர் துரத்துகிறார்கள் என்ற போது அவனால் அதனை சுலபமாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
அவனுள் இருந்த மனிதாபிமானம் அவளை இந்த இக்கட்டினின்று விடுவிக்கச் சொல்லிக் கொண்டிருந்தது. அவள் கூறியவற்றை அசைப் போட்டவனுக்கு மனதில் சில கேள்விகள் எழுந்தன.
“ஏன் ரிஷா அப்படின்னா அந்த ருத்ரபாண்டி தான் உன்னை கொல்ல ஆள் விட்டுருப்பார்னு நினைக்கிறியா?”
“ம்ம்ம்… அப்படித்தான் நினைக்கிறேன் இந்தர், அவர் பணத்துக்காக அந்த சின்னப் பையனை கொன்னுட்டார். என்னையும் கொன்னுடுவார். இத்தனை பேர் என்னைக் கொல்ல துரத்துராங்கன்னா… அதற்கு காரணம் அவரா தான் இருக்கணும்.” குனிந்து தலையை மடியில் ஊன்றி இருந்த கைகளுக்குள் புதைத்துக் கொண்டாள்.
“அவர் உன்னைக் கொல்லுறதானா அதுக்கு என்ன மோடிவா இருக்கும்?”
“வேறென்ன காரணம் இந்தர். SKR Garments பார்ட்னர்ஸ் 3 பேர். அதில் எங்க அப்பாவுக்கும், அந்த கனகவேல் அங்கிளுக்கும் ஒவ்வொரு பிள்ளைங்க. கனகவேல் அங்கிள் பையனை கொன்னாச்சு, அதுக்கப்புறம் என்னையும் தீர்த்துக் கட்டிட்டா அந்த கார்மெண்ட்ஸ் முழுவதுமே அவர் கைக்குள்ள வந்திடும்ல.”
“எனக்கு இதில் ஒரு சில கேள்விகள், சந்தேகங்கள் இருக்கு ரிஷா.அந்த பையனை கொன்னது ருத்ரபாண்டியா இருந்தா இந்நேரம் அவர் ஜெயிலில் இருந்திருக்கணுமே?”
“அது என்ன ஆச்சு என்று எனக்கு விபரம் தெரியாது இந்தர்? என்னை தான் அந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே டார்ஜிலிங்க் அனுப்பிச்சிட்டாங்களே. ஒருவேளை அவர் அந்த சின்னப் பையனை சாமார்த்தியமா சாட்சிகள் இல்லாம கொலை செய்து விட்டு, தான் அதில் மாட்டிக்காம தப்பிச்சிருப்பாராக இருக்கும்.”
“ஒருவேளை சட்டத்தின் முன் மாட்டிக் கொள்ளாத அந்த கொலையாளி பார்வையில் நான் இருந்தால் என்னை பாதுகாக்க முடியாதுங்கிறதற்காக என்னை பாதுகாக்க, என் பெற்றோர் என்னை அவர் பார்வையில் படாமல் தலைமறைவாக வைத்திருக்கலாம்னு நினைக்கிறேன்.”
“என்ன இருந்தாலும், ஒருவேளை ஒருவேளை என்று நீ சொல்வதெல்லாமே உன் யூகத்தின் அடிப்படையில்தான் என நான் சொல்கிறேன், சரியா? இல்லையா?
“ம்ம்ம்…” தயங்கியவள் நீ சொல்றதும் சரிதான் இந்தர்” என ஒத்துக் கொண்டாள்.


Leave a Reply