“தாயே மன்னிச்சிடுமா. உங்க அம்மா அப்பாவை நாளைக்கே தேடி கண்டு பிடிச்சுக்கலாம். இப்ப மலை இறங்கிடு ஆத்தா” அவளைப் பார்த்து விளையாட்டாய் கும்பிட்டவன்.
அவளோடு சாலையைக் கடந்து எதிரில் நின்ற டாக்ஸியை நோக்கி பயணிக்க முயல சட்டென்று ரிஷா அவன் கையைப் பிடித்துக் கொண்டு எதிரில் வந்த காருக்கு இடையே பாய்ந்து நுழைந்து, சாலைக்கு அந்தப் புறம் சென்று அவசரமாய் டாக்ஸியில் அமர்ந்து அவனையும் உள்ளே அமரச் செய்தாள் கதவை உடனே இழுத்து பூட்டினாள்.
*ரிஷா என்ன லூசாகிட்டியா நீ? இன்னிக்கு நீ என்னை இழுத்துட்டு வந்த வேகத்தில நாம கார்ல மோதி இருந்தோம்னா இன்னிக்கு செத்து, செத்து, நாளைக்கு பாலுதான்…”
“இல்லன்னாலும் இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலுதான்டா அங்கே பாரு..”
அவள் நீட்டிய இடத்தைப் பார்த்தான், அதே பில்டிங்க் செக்யூரிட்டி வாயிலில் சில தடியன்கள் நின்றுக் கொண்டிருந்தனர். அதே தடியன்கள் ஜுஹீ பீச்சில் இவர்களை துப்பாக்கியோடு துரத்தியவர்கள்.
கலவரமாக அவளை நோக்கியவன்.
“வில்லே பார்லே ஜானா ஹை பாய் சாப். காடி நிகாலோ” (வில்லே பார்லே செல்ல வேண்டும் அண்ணா, வண்டியை எடுங்கள்) என்றான்.
“எங்கே போறோம் இந்தர்?”
“ரிஷி ஆபீஸ்க்கு போறோம், ப்ரைவேட் டிடெக்டிவ் ரிஷி..”
வண்டி வேகம் பிடித்தது.
தொடரும்


Leave a Reply