Peraanmai_Short story_Jansi

“அப்படின்னா தூங்குமூஞ்சி மேடம் , தினம் அண்ணா பைக்கில தான் போவாங்கன்னு நினைக்கிறேன் சரியா?”

“அதெப்படி கண்டுபிடிச்சீங்க?”…எதிர் முனையில் அவள் நாக்கைக் கடிப்பதை அவனால் கற்பனை செய்ய முடிந்தது. பேச்சை மாற்ற,

“உங்கிட்டதான் ஸ்கூட்டி இருக்கே அதில போறதுக்கு என்ன?” என்றதற்கு,

“எனக்கு வண்டி ஓட்ட ரொம்ப பயமா இருக்கு ஹரி…”

“ஸ்கூட்டி ஓட்டத் தெரியலை, வாய் மட்டும் நல்லாப் பேசு”

என்று சொல்லிச் சிரிக்க மறுமுனையில் அவள் சிணுங்கியது இன்றும் இதமாய் மனதில் நிழலாடியது.

 இதோ ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நிச்சய மோதிரம் மாற்றி இரண்டே நாளாகிறது. லீவு முடிந்து இன்று ஆஃபீஸில் ஜாயின் செய்வதாகக் கூறியிருந்தாள்.

இப்போது முன்னே சென்றுக் கொண்டிருக்கும் பைக்கின் திசை ஒரு பெரிய பாலத்தில் ஏறும் வழியில் சென்றுக் கொண்டிருந்தது. சத்யாவோ பைக்கில் முன் பக்கம் சற்றுக் குனிந்து என்னவோச் செய்துக் கொண்டிருக்கிறாள் . என்ன செய்துக் கொண்டிருக்கிறாள் ?ஒன்றும் புரியவில்லை.

சற்று நேரத்தில் விர்ரென பைக்கின் சப்தத்தின் நடுவிலும் அவனுக்கு போனின் மெலிதான மெஸேஜ் டோன் கேட்க , மனதில் ஏதோ தோன்ற பைக்கை ஓரத்தில் நிறுத்தி என்னவென்று வாசித்தான்.

“ஹரி, ஆஃபீஸிலிருந்து புறப்பட்டவள் ஒரு வேலையாக நண்பனோடு xxx …..பாலம் வழியாகச் சென்றுக் கொண்டிருக்கின்றேன்.ஏனோ திடீரென பயமாக இருக்கிறது. நீ வந்து என்னை அழைத்துச் செல்வாயா? நான் உனக்கு போன் செய்கையில் அட்டென்ட் செய்துக் கேட்கவும். எதுவும் தவறாக தோன்றினால் எனக்கு உதவி செய்யவும்.”

செய்தியை வாசித்த ஹரியின் மன நிலையை என்னவென்றுச் சொல்ல, பைக்கை மறுபடியும் ஸ்டார்ட் செய்து அசுர வேகத்தில் இயக்கினான். இதோ அவன் தன்னவளைக் கண்டுக் கொண்டான். மிதமான வேகத்தில் பின் தொடர்ந்தான்.

 மனதிற்குள்ளாக “கண்ணம்மா, பயப்படாதே நான் இருக்கிறேன்” என்றுச் சொல்லிக் கொண்டான். “அவளுக்கு மெஸேஜ் செய்யும் கால அவகாசம் கூட அவனிடம் இல்லையே?’ எனவே காற்றை விட , இன்டெர்நெட்டை விட வேகம் கொண்ட அவன் எண்ண அலைகள் மூலமாக செய்தி அனுப்பினான், அது அவளைச் சேர்ந்திருக்கும் என நம்பினான்.

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!