Peraanmai_Short story_Jansi

“ஹரி சாரி”

“….”

“அவனுக்கு இப்படி எண்ணம் இருக்கும்னு எனக்கு தெரியாது. ஆஃபீஸில் ரொம்ப  நல்லமாதிரி  நடந்துக் கொள்வான்.”

“…”

“ஏதோ ஹெல்ப் கேட்டான் அதனால் தான் வந்தேன். பாதிவழியில் மனசுக்கு சரியாகப் படலை கொஞ்சம் குழப்பமாவே இருந்தது.வருடக் கணக்காக பழகியவனை சட்டுன்னு சந்தேகப்படவும் தோணாமல் இருந்தது. அதனால் தான் இந்த பாலம் கிட்டே வரவும் உங்களுக்கு மெஸேஜ் செய்தேன். எனக்கு எதுவும் ஆனாலும் உங்களுக்கு தெரிய வேணும்னுதான் உங்களுக்கு போன் செய்தது.”

“சத்யா …”


இப்போது உணர்ச்சிவசப்படுவது ஹரியின் முறையானது.


“அப்படி எதுவும் ஆக நான் விடமாட்டேன் கண்ணம்மா,இனிமே ஒருமுறை இப்படிச் சொல்லாதே”,அவளை இறுக்க அணைத்துக் கொண்டான் அவன்.

தத்தம் வீட்டிற்கு சென்று சற்று நேரம் கழிந்த பின்னரே அந்நிகழ்வின் பாதிப்பு அவர்களிடம் மெதுவே குறைந்தது.

இரவின் தனிமையில் அவர்களுக்கேயான போன் உரையாடல் ஆரம்பிக்க,

“சத்யா, நீ அந்த மனோஜிடம் கொஞ்சம் கவனமாவே இரு. அவனை கொஞ்சம் பயமுறுத்தி வைப்பது நல்லதுனே தோணுது. ஆனால் இந்த விஷயம் தெரிந்தால் உன் வீட்டில் கவலைப் படுவாங்களோ? என்று யோசிக்கிறேன். எதற்கும் ஒரு முறை நாளை நான் காலை உன் வீட்டில் வந்துப் பேசுகிறேன்.”

“ம்ம்…”

“என்ன?”

“ஹரி, நான் இனிமேல் வெளியில் யார் கூடவும் பேசவே கூடாதுனு நினைத்து இருக்கிறேன்.”

“ஏய் சத்யா இதென்ன முட்டாள்தனம், யாரிடமும் பேசாமல் எப்படி இருக்க முடியும்?”

“நான் சாதாரணமாகத் தான் எல்லோரிடமும் பேசுவேன். இவன் இப்படி என்னைக் குறித்து நினைப்பான்னே நான் நினைக்கலை” ஆதங்கம் அவள் குரலில்.

“உன்னுடைய இந்த முடிவு எனக்குப் பிடிக்கவில்லை சத்யா.இன்றைக்கு நடந்ததில் உன் தவறென்று என்ன இருக்கிறது?.நீ உன் இயல்புப் படி இருப்பது தான் எனக்கு மிகவும் பிடித்தது. வீணாக ஓட்டுக்குள் உன்னை சுருக்கிக் கொள்ளாதே….என்ன புரியுதா?”

“ம்ம்ம்…”

“ஒரு எல்லைக்குள் எல்லோரிடமும் பழகு, ஆனால் மிதமிஞ்சி யாரையும் நம்பாதே சரியா?”

“ம்ம்…”

“ஆனால், ஒரு ஆபத்து என்றதும் உன் அப்பா, அண்ணாவை அழைக்காமல் என்னை அழைத்தாய் பார்த்தியா? எனக்கு இன்னும் வானத்திலேயே மிதந்து கொண்டே இருக்கிற மாதிரி இருக்கு தெரியுமா?
நான் உனக்கு அவ்வளவு ஸ்பெஷலா செல்லம்?”
             
“ம்ம்க்கும்…ரொம்பல்லாம் செல்லம் கொஞ்ச வேண்டாம்.அப்பாவ கூப்பிட்டிருந்தா இவ்வளவு நேரத்தில் அட்வைஸ் கேட்டு கேட்டே காது புண்ணாகியிருக்கும், அண்ணாவ கூப்பிட்டிருந்தா மனோஜுக்கு மட்டுமா, எனக்கும் கன்னம் பழுத்திருக்கும். அதான் உங்கள கூப்பிட்டேனாக்கும்…”

“என் சத்யா ஃபார்மிற்கு வந்து விட்டாள்…” ஆசுவாசமாகினான் அவன்.

Pages: 1 2 3 4 5 6


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!