Peraanmai_Short story_Jansi

“ஏன் சத்யா, அவன் நான் காக்காவை விடக் கறுப்புன்னு சொன்னவுடனே ஏன் உனக்கு அவ்வளவு கோபம்?. பாலத்தில தள்ளி விடப் பார்த்த நீ..ஒரு நிமிஷம் நானே பயந்திட்டேன்.”

“பின்ன அவன் ஒரு அறிவுக் கெட்டவன், உங்கள ஏதாவது குறை சொல்லணும்னு சொல்லிட்டிருக்கான் அவனை சும்மா விட்டதே தப்பு.”

“சரி சரி அமைதி..அமைதி…”

“ஏன் ஹரி மனிதனுக்கு அழகு தோல் நிறத்தில இருக்குதா என்ன? ….அதுவும் ஆண்களுக்கு எது அழகு தெரியுமா?”

“சொல்லு…”

“நான் உங்க மனைவின்னு தெரிந்தும் என்னிடம் தவறான எண்ணத்தோடு பேச வந்த மனோஜின் புற அழகு , அவன் உயரம், நிறம் எல்லாம் உண்மை அழகில்லை ஹரி…”

“இலக்கியத்தில எப்பவோ படிச்ச ஞாபகம்,என் மனசில தங்கி விட்ட விஷயம் இது. பிறன்மனை நோக்காமை என்னும் பேராண்மை, ஆம்  பேராண்மைதான் அழகு ஹரி.”

“அது உங்களிடம் இருப்பதை உணர்ந்த பின் தான் நம் திருமணத்திற்கு நான் சம்மதம் சொன்னதே.”

“எனக்கு உங்களுடைய அந்த அழகு போதும் ஹரி…”

அங்கே தன் மனைவியாக வரப் போகிறவளின் இந்த பேச்சைக் கேட்டுப் பேச்சற்று நின்றான் அவளுடைய பேராண்மையாளன்.
                                                            முற்றும்

Pages: 1 2 3 4 5 6


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!