எதிரே வந்த மரகதம் அத்தை என்னடா இதுதான் வீட்டுக்கு வர்ற நேரமா? இப்படி வேலை வேலைன்னு அழைஞ்சா எப்படி ? அதான் முகத்தில புது மாப்பிளை களையே காணோம்.
களையா அது மூஞ்சிலே எப்படி வரும்,களை வந்ததும் முகம் பார்க்க எப்படி இருக்கும் அது என்ன மாதிரி கலர்ல இருக்கும் சரி உடனே கூகிள்ல ஸர்ச் பண்ணிப் பார்த்துடனும் என்று…….. ஆதி மைன்ட் வாய்ஸ்ங்க இது (பயபுள்ள இப்படியெல்லாம் மனசில இருக்கிறத உடனே பேசுறதா இருந்தா மழை பெஞ்சு ஊரெல்லாம் செழிப்பாயிடாது )
ஒரு புன்னகையோடு ரேமண்ட்ஸ் கடை பொம்மை மாடல் கனக்கா நின்றவனை கிட்டே நெருங்கிய மரகதம் அத்தை
ஏண்டா பொண்ண உனக்கு பிடிச்சிருக்கா இல்லை….என்று தொடரும் முன்
பிடிச்சிருக்கு அத்தை.. என்றான் அவசரமாக,
அப்படின்னா சரி ஆனால் உனக்கு மட்டும் எதுவும் பிரச்சினைன்னா அத்தை கிட்ட சொல்லிடு என்ன நம்ம சொந்ததில இத்தனை பொண்ணு இருக்க உங்க அம்மா அசல்ல போய் எதுக்கு தேடினா..என்ற தொண தொணப்பிலிருந்து காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்று தேடியபோது
என்னடா புது மாப்பிளை என்ற தங்கை கணவன் ரவியின் குரல் கேட்டு நிம்மதியானான்.
ஹாய் ரவி எப்படி இருக்கே என்றவனிடம் உற்சாகமாக கரம் குலுக்கி கொண்டான்.ரவி ஏற்கெனவே உறவு வட்டத்தில்இருந்த காரணத்தால் அவர்கள் இருவருக்குமிடையே அழகான நட்புறவு உண்டு.
ரவி உன்கிட்ட ஒரு விசயம் பேசணும், கொஞ்சம் பொறு உன் குட்டிப் பையனை அம்மாகிட்ட கொடுத் திட்டு வாரேன் என்று ரவியை காக்க வைத்து விட்டு அம்மாவிடம் போய் கொஞ்சம் செல்லம் கொஞ்சி சமாதானம் செய்து, அம்மா பிரணவ்க்கு சாக்லேட் குடுங்கம்மா என்று சொல்லி அவனை தாயிடம் கொடுத்துவிட்டு ரவியை அழைத்து தன் ரூமில் கூட்டிச் சென்றான்.
ரவி எனக்கு ஒரு ஹெல்ப் செய்வியா…
என்னடா…
அது ….அது வந்து…….
என்ன ஆச்சு உனக்கு………
எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி ஒரே ஒரு தடவை பொண்ணை பார்க்கணும்டா பொண்ணு எப்படியிருப்பான்னு கூட எனக்கு தெரியாது.
ஏய் கல்யாண கார்டுல உங்க ரெண்டு பேரு போட்டோவும் இருக்குதே…பூ வச்ச அன்னிக்கு கூட உனக்கு போட்டோ அனுபியிருந்தாங்களேடா ..
அது இத்தானூண்டு போட்டோ .. நிச்சயதார்த்த போட்டோல முகமே தெரியல……சுத்தி எல்லோரும் நின்னுகிட்டு
முகம் முழுக்க சிரிப்பை பூசிக் கொண்ட ரவி..
ஏண்டா கல்யாணத்துக்கு நாங்க எல்லோரும் சுத்தி நிக்கலாமா இல்ல..
ச் ச்சு சும்மாயிருடா …
அத்தை என்னடான்னா என் மகன் நீங்க பொண்ணு பார்த்தா போதும்னு சொல்லிட்டான்னு ஊரெல்லாம் பெருமை பேசிட்டு இருக்காங்க நீ என்னன்னா என் கிட்ட வந்து இப்படி ஐடியா கேட்டுட்டு இருக்கே…..ஏய் உன்னை எல்லாம் உலகம் நல்லவன்னு நம்புதேடா .
அதெல்லாம் எனக்கு தெரியாது …இது உன்னால மட்டும் தான் செய்ய முடியும் ப்ளீஸ் ரவி…
ஆனால் ஒன்னு நான் அங்க போறது அவங்களுக்கு முன்னமே தெரியக் கூடாது
எனக்காக அவங்க தடபுடல் செய்றது எனக்கு பிடிக்காது அதுதான் என்றவனை….
என்னடா இவ்வளவு தீவிரமா பேசிட்டிருக்கே அப்படின்னா கொஞ்ச நாள் முன்ன வந்திருக்கலாமில்ல.இப்போ கல்யாணத்துக்கு 10 நாள் முன்ன வந்து சந்திககணும்னா நான் என்ன செய்றது. அதுவும் அவங்களுக்கு சொல்லவும் கூடாதுன்னா அது எப்படி..
சரி நான் ஏதாவது ஏற்பாடு செய்றேன் என்று ரவி சென்று விட்டான்.
அவன் சென்றதும் ஓய்வேடுக்க படுக்கையில் சரிந்தவன் நான்கு நாள் முன்பு வந்த அவன் நண்பன் குறித்த செய்தி குறித்து சிந்தனையில் ஆழ்ந்தான். சுந்தர் சில மாதங்கள் முன்பு திருமணமானவன் அவனைக் குறித்து தான் வேறொரு நண்பன் மூலமாக தெரிய வந்தது சுந்தரின் மனைவிக்கும் தாய்க்கும் பிரச்சினை வந்ததில் அவன் தனிக்குடித்தனம் போய் விட்டானாம். சுந்தர் அம்மா பற்றி இவனுக்கு நான்கு தெரியும் அவ்வளவு அமைதியான குணம் அவர்களுக்கு, சுந்தரின் மனைவியும் நல்ல மாதிரி தான் ஆனால் என்ன பிரச்சினையோ .அவனாவது சரி வீட்டில் இரண்டாவது மகன்தான், அவன் பெற்றோருக்கு துணையாக அவனுடைய அண்ணன் இருக்கிறான். தானோ வீட்டுக்கு ஒரே பிள்ளை தனக்கும் திருமணம் முடிந்ததும் மனைவி இப்படி ஏதாவது சொன்னால் என்ற குழப்பம்தான் இப்போது அவன் மனதில்.
அம்மாவை மட்டும் போய் பெண் பார்க்க சொன்னது தப்போ ஒரு வேளை தானும் கூடவே சென்று முதலிலேயே கல்யாணத்துக்கு பிறகு தனிக்குடித்தனம் எல்லாம் வர முடியாது என்று பேசி முடிவு செய்திருக்க வேண்டுமோ என்ற சிந்தனை அது தான் எப்படியாவது அந்த பெண்ணை அவள் பெயர் என்ன அகிலாவா பார்த்து பேசி விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு வந்தான் அதற்காக தான் ரவியிடம் உதவியும் கேட்டு கொண்டான்.
அடுத்த நாள் ரவி ஏய் மாப்பிளை உனக்கு ஒரு சான்ஸ் இருக்குடா பொண்ணு வளையல் சைஸ் வாங்கிட்டு வரணுமாம். அதான் நீ உன் ப்ரெண்ட்ஸ்க்கு கார்ட் கொடுக்க போய்ட்டு வர்றப்போ வாங்கிட்டு வருவேனு சொல்லிட்டேன் அங்க எப்போ போக முடியும்னு குறிப்பிட்டு சொல்ல முடியாதததால அவங்க கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிட்டேன் சரியா என்று கேட்ட ரவியிடம் தாங்க்ஸ்டா என்று கூறி எப்போ போகலாம், எப்படி பேச வேண்டும் என்று திட்டமிட ஆரம்பித்தான்.
ஐந்து மணியளவில் அகிலாவின் வீட்டை அடைந்தவனை அவ்வீட்டின் பூட்டு வரவேற்றது.இப்போ என்ன செய்யலாம் என்று யோசித்தவனுக்கு பக்கத்து வீட்டின் கரகோஷம் ஆர்வத்தை தூண்டியது என்னவென்று எட்டிப் பார்த்தால் அங்கே பிறந்த நாள் விழா போலும் ஒரே ஆட்டம் பாட்டமாக இருந்தது அந்த குழந்தைகள் கூட்டத்தில் சற்றே பெரிய குழந்தையாக ரெட்டை பின்னலும் த்ரீ போர்த் & டீ ஷர்டில் விளையாடிக் கொண்டிருந்த முகத்தை எங்கோ பார்த்த மாதிரி ஓ இது அகிலாதானே இல்லை ஒரு வேளை அவள் தங்கையோ? இல்லையே அம்மா சொன்னது ரொம்ப நன்றாக ஞாபகம் இருக்கிறது அவங்க வீட்டில அவள் ஒரே பொண்ணு, அவளுக்கு ரெண்டு அண்ணனுங்க என்று அப்போ இது அவளேதானா அடக் கடவுளே இந்த ரிங்கா ரிங்கா ரோஸஸ் விளையாடுற குட்டிப் பொண்ண எனக்கு கட்டி வைக்கிறாங்களே உயரம் ஐந்தடிதான் இருப்பா போலயே எங்க அம்மாக்கு ஆனாலும் இப்படி ஒரு ஆசை இருக்க கூடாது அமிதாப் ஜெயாபாதுரிக்கு அப்புறம் நாங்க தானா என தலை சுற்ற ஆரம்பித்தது.
அவன் வீட்டின் வாயிலில் நின்றது யார் சொல்லி தெரிந்ததோ அவள் மான் குட்டி போல துள்ளி ஓடி வந்தாள்.வாங்க வாங்க நீங்க ஆதவன் தானே உங்க போட்டோ பார்த்திருக்கேன் என்று சற்றும் தயக்கம் இல்லாமல் பேசியவளை பதில் சொல்லாமல் பார்த்திருந்தான்.அம்மா அப்பா கார்ட் கொடுக்க போயிருக்காங்க என்றவள் காஃபி கொண்டு வந்தாள்.
ஆதவன் வீட்டில் அம்மா அப்பா முதல் நாய் குட்டியிலிருந்து கிளி வரை எல்லாவற்றையும் ஐந்தே நிமிடத்தில் விசாரித்து முடித்து விட்டாள்.இவளுக்கு மட்டும் எல்லாம் தெரிந்திருக்கிறதே எப்படி ..என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, தன் வேலை பார்க்கும் நிறுவனம் குறித்தும் தன் படிப்பு குறித்தும் சொல்லி முடித்தாள்.
வேறு என்ன பேச என்று தயக்கம் நிலவியப்போது அம்மா உன்னோட அளவு வளையல் வாங்கி வர சொன்னாங்க என்று சொல்லவும். வளையல் ஒன்றை கொண்டு வந்து தந்தாள். மறுபடி மௌனம் அவர்களை சூழ்ந்து கொண்டது ஆனால் அவள் ஏதோ கேட்க விரும்புவது மட்டும் அவனுக்கு புரிந்தது ஒரு வேளை அவளுக்கும் ஏதேனும் குழப்பம் இருக்குமோ என்று எண்ணியவன் என்ன ? என்றான்.
இல்லை நீங்க ஏன் இவ்வளவு ஹைட்டா இருக்கீங்க.. அதான்
இதற்கு என்ன எக்ஸ்பிரஷன் காட்டுவது என புரியாமல் வந்த விஷயத்தையும் பேச முடியாமல் நான் வறேன் என்று சொல்லி புறப்பட்டான்.
குறித்த நாளில் திருமணம் சிறப்பாக நடைப்பெற்றது.பெண்ணை மாப்பிளை வீட்டிற்கு விட்டுவிட்டு விடைபெற போகும் சமயம் அகிலாவின் முகத்தில் தெரிந்த சோகம் ஆதவனுக்கு இந்த ஏனோ வருத்தம் தந்தது.இந்த பெண்கள் வாழ்வு எவ்வளவு. மாற்றங்கள் கொண்டது.பிறந்த வீட்டை அறவே மறந்து விட்டு கணவன் வீட்டை சொந்தம் கொள்ள வேண்டும் நிர்மலாவும் அப்படித்தானே என தன் தங்கையையும ஒப்பிட்டு பார்க்க தோன்றியது.அப்பொழுது தான் பெண் வீட்டிலிருந்த ஒருவர் பேசியது காதில் விழுந்தது.

