Ullathai Kollai Kondaai_Short Story_Jansi

அகிலா நீ முதலிலேயே  மாப்பிளையை முந்தானையில முடிஞ்சு வச்சிரு இல்லன்னா அம்மா பேச்சை கேட்டு ஆட ஆரம்பிச்சிடுவார் பிறகு  என்னை மாதிரி கஷ்டப்பட வேண்டியதுதான் சொல்லிட்டேன். 

அதைக் கேட்டவனுக்கு  மனதில் இருந்த நெருடல் கூடிப் போனது. இந்த அகிலா எப்படியோ தெரியவில்லையே ? என்ன ஆனாலும் சரி அம்மா அப்பாவை மட்டும் பிரியவே கூடாது என்று முடிவு செய்துக் கொண்டான். கொஞ்சம் தள்ளிப்போகலாம் என்று முடிவு செய்து அடுக்களைக்கு அருகில் செல்ல அங்கே மரகதம் அத்தை அம்மாவிற்கு மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார்.

 இங்க பாரு ராஜி நீ ரொம்ப வெகுளி அதான் சொல்றேன் மருமககிட்டே ரொம்ப கண்டிப்பாக  நடந்துக்கோ என்ன ? இல்லன்னா என்னை மாதிரி தான் அவஸ்தை படணும என் மகன் என்னை நீ எப்படி இருக்க அம்மானு கூட கேட்கிறது இல்ல…ஹூம்…

என சோக குரலில் பேசி அம்மாவை பீதி கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு பக்கம் கோபம் வந்தாலும் இன்னொரு பக்கம் தானும் அப்படித்தானே சுந்தரை பற்றி கேள்வி பட்ட திலிருந்து நம்பிக்கை இழக்கவில்லையா ?ஏன் இன்னும் கூட மனதில் ஒரு நெருடல் இருக்கிறதே .ஏன் இந்த மனிதர்கள் மட்டும் எப்போதும் எதையாவது நினைத்து கலங்கி கொண்டே இருக்கின்றார்களோ?.திருமணம் எண்ணு பந்ததில் ஒருவரை ஒருவர் முழுவதும் நம்பாத வரையிலும் அங்கே முழுமையான அன்பு நிலவ வாய்ப்பே கிடையாது எண்ணிக் கொண்டான்.

பெண் வீட்டார் அனைவரும் விடைப் பெற்று செல்ல அம்மா அகிலாவிடம் 

சேலையை மாற்றிக் கொள்றியாம்மா ..

அத்தே என் துணில்லாம் எங்க இருக்கு ..

மாடியில அந்த முதல் ரூமில் உன்னோட சூட்கேஸ் இருக்கு பார்த்து கவனமா போ
நிம்மி அகிலா கூட போயி அவளுக்கு ஹெல்ப் செய்யுமா..

சரிமா.. என்றவள்

ஹாய் அண்ணி எப்படி இருக்கு உங்க வீடு ….


எங்க வீடு இல்லன்னா  நம்ம வீடு என்று சொல்வாள் என நிலைத்திருக்க  தன் நாத்தனார் உங்க வீடு என்றது மனதை மகிழ்விக்க

ரொம்ப அழகா இருக்கு.இந்த படியில இருக்கிற டிசைன் மாதிரி நான் எங்கேயும் பார்க்கல 

அப்படியா இது அண்ணா சாய்ஸ்

என்று பேசியவாறு இருவருமாக மாடியில் ஏறினர். அம்மா என்று பிரணவ் பின்னாலேயே வந்து நின்றான்.  வாடா அம்மாவ தனியா எங்கேயும் விட்டுடாத என்று கொஞ்சி கொண்டு அவனை தூக்கிக் கொண்டாள்.நீங்க உள்ள போய் ட்ரெஸ் மாத்திக்குங்க அண்ணி நான் வெளியே நிக்கிறேன் என்றாள்.

 அகிலா உடை மாற்றி கதவை திறந்து வெளியே வரவும் விளையாடிக் கொண்டிருந்த  பிரணவ் கையிலிருந்த கோலிக் குண்டுகள் கீழே சிதறவும் நேரம் ஒன்றாயிருக்க கோலிக் குண்டுகள் மீது கால்  வைத்த அகிலா நிலை தடுமாறி விழுந்ததில் வலது முட்டியில் பலமான அடி.

டேய் பிரணவ் என்று அவனை அடிக்க கை ஓங்கியவளை தடுத்தாள். ஐயோ அடிக்காதீங்க தம்பி பாவம் தெரியாம தானே ..என்று சொன்னாலும் அடியின் வலியின் காரணமாக  கண்ணீர் திரண்டு விட்டது.

சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் பதற்றத்தில் அவளுக்கு அந்த வீட்டின் ஒவ்வொருவரின் அன்பும் புலப்பட அவளிடம் அறிவுரை சொன்ன அக்காவின் கூற்று மறந்தே போனது.

வேக வேகமாக படியேறிய ஆதவன் அவளால் எழுந்திருக்க முடியாதது கண்டு அவளை கரங்களில் தூக்கிக் கொண்டு படி இறங்கினான்.

ஐயோ வேண்டாம் நான் நடந்து வறேன் என்று கூச்சப்பட்டாள் அகிலா.” சரி ,படி இறங்கின பின்னே நடந்துக்கோ” என்றவன், கீழே சோபாவில் அமரச் செய்தான். ராஜியம்மா அவளுக்கு உடனே குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவர்  அவளுக்கு எங்கே ஆடிப் பட்டிருக்கிறது என விசாரித்தார்.

   முதலில் நான் கண் த்ரிஷ்டி சுற்றியிருக்கணும். என் மருமகளுக்கு யார் கண்ணு பட்டதோ என்று மரகதம் அத்தை பக்கம் ஒரு பார்வை பார்த்து விட்டு அவசர அவசரமாக த்ரிஷ்டி சுற்றிய தாயை பார்த்தவன் அம்மாவிடம் அத்தை மந்திரம் ஒதியது எடுபடவில்லை என்று புரிந்து ரகசிய புன்னகை சிந்தினான்.அகிலாவிற்கு  தன் அத்தையின் செயல் பார்த்து மனம் நிறைந்து போனது.

Pages: 1 2 3 4 5

error: Content is protected !!