6. Mudan muraiyaga paartha pothu…_ Short Story_Jansi

     எதிர்பாரா நிகழ்வில் காரின் பின்சீட்டில் முற்றிலுமாய் தன்னை மறைத்துக் கொண்டு குனிந்து தட தடக்கும் இதயத்தோடு ஒளியும் போது அந்த காட்டான் மைக்ரோ செகண்ட் அவளைத் திரும்பிப் பார்த்து தன்னுடைய சண்டையைத் தொடர்ந்தான். அப்போது அவன் கண்களில் இருந்த பாவனை என்ன எனச் சரண்யாவால் விளங்கிக் கொள்ள இயலவில்லை.

     அவனைப் பற்றி அவள் எண்ணியதென்ன அவன் துப்பாக்கியை கையாண்ட விதம் என்ன?, வெகு சாதாரணமாய் எதிரிகளை தாக்கினான். மருண்டு அந்த கார் கண்ணாடி மூலமாய் அவள் பார்த்துக் கொண்டிருக்க அவன் கால்பந்தாய் பாவித்து அவர்கள் ஒவ்வொருவரையும் பந்தாடினான்.

     ஆறேகாலடி உயரமும் , ஆஜானுபாகுவான தோற்றமும் , நிமிர்வும் நடையும் , சற்று நேரத்தில் அவன் நொறுக்கியவர்களை பொறுக்கிச் செல்ல வந்த போலீஸ் வாகனத்தில் வந்தவர்கள் அவனை சல்யூட் அடித்த போது தான் அவளுக்கு அவன் பதவியின் உயரம் புரிந்தது.

     ச்சே, பயந்தாங்கொள்ளியைப் போல பின்சீட்டில் ஒளிந்துக் கொண்டோமே அதனால் தான் அவன் என்னை அப்படிப் பார்த்திருக்கிறான் என்று மிகவும் தலைக் குனிவாக உணர்ந்தாள். அவனோ காருக்குள் அவள் இருப்பதை மற்றவர்களுக்கு தெரிவிக்காமலேயே தன்னுடைய டிபார்ட்மெண்ட் ஆட்களிடமிருந்து விடைப் பெற்று அவளை அவளுடைய ஊர் வரைக்கும் கொண்டுச் சேர்த்தான்.

     அவனுக்கு நன்றித் தெரிவித்து விட்டு ரோட்டோரமாய் அவளை அழைத்துச் செல்ல வந்திருந்த தம்பி, அப்பாவைப் பார்த்தவள் அமைதியாக தம்பியுடன் திரும்பச் சென்றாள். தன்னோடு அப்பா வரவில்லையே எனத் திரும்பி பார்த்த பொழுது அப்பாவோடு அவன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டாள். அப்பாவுக்கு முன்னே பின்னே தெரியாத யாரிடமாவது பேசியே ஆகணும் போல எனச் சலித்தவளாய் முன்னே நடந்தாள்.

     கடந்து விட்டிருந்தது ஒரு வருடம், சரண்யா வேலையில் சேர்ந்து அங்கும் நிறைய நண்பர்களை சம்பாதித்தாகி விட்டது.அவள் வாழ்க்கை மாதத்திற்கொருமுறை ஃபிரண்ட்ஸோடு மூவி, அவுட்டிங்க் என்று வெகு சுவாரசியமாய் சென்றுக் கொண்டிருந்தது. எப்போதாவது டமால், டுமீல் சத்தம் கனவில் வரும், அதை அத்தோடு மறந்து விட்டிருந்தாள்.

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!