Peraanmai_Short story_Jansi

பேராண்மை_ சிறுகதை_ஜான்சி

பேராண்மை

சிறுகதை

எழுத்தாளர்; ஜான்சி

அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே,அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை.ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்.

பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள். இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே.இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்.

‘ச்சேச்சே…. அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது?’

அவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள்.அது அவளே தான்….! ‘சத்யா, சத்யாவா அது’, ஹரியால் ஒரு நிமிடம் அதை நம்பவே இயலவில்லை.

அவன் திகைப்புற்றது அவள் யாரோடோ பைக்கில் செல்வதைக் கண்டதால் அல்ல.எந்நேரமும் அவளின் மதிமுகத்தை மின்னும் புன்னகையோடோ, எதையாவது விடாமல் தொண தொணத்துக் கொண்டோ, முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டவாறு யாரையாவது கிண்டல் செய்து ,வெடிச் சிரிப்பை அடக்கிக் கொண்டு அந்த பெரிய கண்களைச் சுழட்டுவதாகவோ காணப்படும் பார்த்திருந்த அவனால் அவள் முகத்தில் இவ்வளவு குழப்பத்தை ஒருபோதும் கண்டதில்லை. 

ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அவன் ‘உள்மனம்’ உணர்த்தியது.ஏனென்றால், ‘உள்ளே’ இருப்பவள் அவளல்லவா?! சிறிது தொலைவில் இடைவெளி விட்டு அவளைப் பின்தொடர ஆரம்பித்தான் அவன்.

அவனுக்காக சில மாதங்களாக வரன் தேடிக் கொண்டிருந்த நிலையில் அம்மாவின் தோழி ஒருவர் மூலமாகத்தான் அவளைக் குறித்த அறிமுகம் கிடைத்தது.

நல்லக் குடும்பத்தைச் சார்ந்த நற்குணமுள்ளப் பெண்,தனியார் அலுவலகத்தில் பணிகிறாள் என அவளைக் குறித்து விபரம் கூறி இருந்தனர்.

அவளைக் குறித்து விசாரித்த அம்மாவும் அதையே வழிமொழிய, ஒரு சுப தினத்தில் அவளை பெண் பார்க்கச் சென்றிருந்தான். 

அதன் பின்அவள் போன் நம்பர் பெற்று வந்தது , இரவும் பகலுமாக இருவரும் பேசித்தீர்த்ததுமாக அனைத்து நினைவுகளும் அவன் எண்ணங்களில் மேலெழுந்தன.

இவர்களைப் பொறுத்த மட்டில் பேசித்தீர்ப்பது என்பது சரியான பதமில்லையோ?! அவள் பேசித்தீர்த்தாள், இவன் கேட்டுத்தீர்த்தான் என்பதே சரி.

அப்படி ஒரு “சாட்டர் பாக்ஸ்” அவள். ஒருவேளை அவளை சாப்பிடாதே என்றால் கூடக் கேட்டுக் கொள்வாள் போல, ஆனால் பேசாதே என்றால் அவளால் இயலாது என எண்ணி சிரித்துக் கொண்டான்.

அவளால் மாறிப் போன தன் இயல்பு குறித்தும் கூட அவனுக்கு ஆச்சரியமே.முன்பெல்லாம் யாராவது தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தால் சிடு சிடுக்கின்ற அவன் மன நிலை எங்கே போனது?

மணிக் கணக்காக சத்யா பேசினாலும் சிரித்த முகம் மாறாமல் கேட்பது தான் தானா? விட்டால் “இன்னொரு முறைச் சொல்லுங்க” விளம்பரத்தில் வருகின்ற மாதிரி ஆகி விடுவோமோ? என்றும் அவனுக்குத் தோன்றும்.

Pages: 1 2 3 4 5 6


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!