Epi 11_ Manam Virumbudhe unnai unnai_Jansi

இப்போது அவ்வீட்டில் விகாஷீம், சம்பூர்ணாவும் மட்டும் தனியே இருக்க, என்ன செய்வதென புரியாமல் அங்கே திறந்து கிடந்த அறைகளின் கதவை இழுத்து சாற்றிக் கொண்டிருந்த சம்பூர்ணாவிடம் விகாஷ்,

“பாப்பு” என்றழைக்க திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

“சாரி அண்ணா என் பெயர் சம்பூர்ணா, அப்பா கூட சம்பூன்னு அழைச்சாங்களே?” அவனை திருத்தினாள்.

‘ஓ நாங்க பாப்பூன்னு அழைச்சா இவங்களுக்கு பிடிக்காது போலவே?’ இளமுறுவல் அவனது முகத்தில் தவழ,

“ஓகேமா பூர்ணா”

புதிதாக தன்னை அழைத்தவனை நிமிர்ந்துப் பார்த்து முறுவலித்தாள். தனது வேலையை தொடர்ந்தாள். டைனிங்க் டேபிள் அடுத்த கண்ணாடிச் சுவற்றில்  திறந்திருந்த பெரிய ஜன்னல் கதவுகளை இழுத்து மூடினாள். விகாஷ் அவளிடம்,

“லிண்டாவை முன்ன நீ எப்ப பார்த்த?” எனக் கேட்க அவன் வலையில் அவள் அழகாய் சிக்கினாள்.

“ரொம்ப நாள் முன்ன போனில் பார்த்தேன்ணா” சொன்னதும் மறுபடி திடுக்கிட்டு அவனை நோக்கினாள்.

தொடரும்

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!