Epi 13_ Manam Virumbudhe unnai unnai_Jansi

இப்போது அவள் கைகளில் அவன் கண்களின் ஈரம் தீற்றியிருந்தது.

“நன்றிமா”

ஆனந்தின் உணர்வுகள் புரியவர இவளுக்குள்ளும் நெகிழ்ச்சி. ஆனந்த் சில நிமிடங்களில் தன்னை சமநிலைக்கு கொண்டு வந்திருந்தான். சம்பூர்ணாதான் இன்னும் சமநிலைக்கு வராமல் திணறினாள்.

“டேய் விகாஷ் எங்க ஊர் வீட்டுக்கு வரலை என்று வருத்தப்பட்டாய் இல்லையா? இதோ பார் இதுதான் எங்க ஊர் வீடு. இப்படித்தான் இருக்கும்.”

“பூர்ணா மிக அருமையாக வடிவமைத்து இருக்கின்றாய். ஆனந்த் எப்போதும் ஊரை குறித்து சொல்லிக் கொண்டே இருப்பான். வெகு மணி நேரங்கள் செலவழிக்காமலேயே நீ சுலபமாய் ஊர் வீட்டிற்கு என்னை அழைத்து வந்து விட்டாய்” என சம்பூர்ணாவை பாராட்டியவனை ஆனந்த் குரல் அழைத்தது.

“விகாஷ் இங்கே பார்த்தாயா இது என் அம்மா அப்பா?”

“…”

“என் அம்மா இப்போது இருந்தால் என்னமாக மகிழ்ந்திருப்பார்கள் தெரியுமா? உன்னை பார்த்திருந்தால் ஓடி ஓடி உபசரித்து இன்னுமாய் பாசத்தை கொட்டியிருப்பார்கள்” என ஆனந்த் தன் போல ஏதேதோ சொல்லிக் கொண்டு, சிறுவயது நினைவுகளை பகிர்ந்துக் கொண்டிருக்க இவர்கள் கேட்டிருந்தனர்.

சற்று நேரத்தில் ஆனந்தின் வீட்டின் வாயிலில் கணேசன் வந்து நின்றார்.

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!