Epi 13_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“நான் சும்மா ஏதாவது சொன்னாலும் இரண்டு பேரும் தவறாக எடுத்துக் கொள்கின்றார்கள் தம்பி” என்றவராக எதுவும் நிகழாதது போல் கணேசன் இருக்க, இவன் அவரது மனோபாவம் கண்டு அயர்ந்து போனான்.

இரவு உணவு வேளை

வழக்கம் போல சம்பூர்ணா பறிமாற ஆரம்பிக்க, “பாப்பூ நீயும் எங்களோடு அமர்ந்து சாப்பிடுவதானால் மட்டும் தான் சாப்பிடுவதாக நினைத்திருக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?” என ஆனந்த் கேட்டான்.

‘எல்லாம் மகனால் வந்தது’ என எண்ணிய கணேசன் மகனை முறைத்தார். மற்ற நாட்களில் எப்படியோ உறவினர்கள் முன்பு பந்தா காட்டுவது பலரின் வழக்கமல்லவா? அவரும் கூட அப்படித்தான்.

“சரி அத்தான்” என புன்னகைத்து சொன்ன சம்பூர்ணா, 

“முதலில் இவனுக்கு மீனில் முள் எடுத்து கொடுத்திடறேன் அத்தான், இல்லைனா இவன் சாப்பிட மாட்டான். நீங்க சாப்பிடுங்க”

என்றவளாக தம்பிக்கு பொரித்த மீன் சதைப் பகுதிகளை பிய்த்தெடுத்து கொடுத்துக் கொண்டு இருந்தாள். அதனை பார்த்தவனுக்கு தன் அன்னை நினைவிற்கு வராமல் இல்லை. வந்தது முதலாக தனது இளம் பிராயத்தை நினைவுப் படுத்திக் கொண்டே இருக்கும் பாப்புவின் மீது அவ்வப்போது அவனது பார்வை பதிந்து விலகிக் கொண்டு இருந்தது.

“அத்தான் உங்களுக்கும் பிச்சு தரவா?” என அருகில் வந்து நின்றவளிடம் ஆமென அவன் தலையசைக்க அவனுக்கு வைத்திருந்த மீனை அவள் பிய்த்துக் கொடுக்கலானாள்.

ஆனந்த் அவள் கரங்களில் தனது கண்களை பதித்திருந்தான்.

தொடர்

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!