Epi 13_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“எதற்கண்ணா இதெல்லாம்? வேண்டாம்.” என சம்பூர்ணா தயங்க, பிரசன்னா ஆசையாக வாங்கிக் கொண்டான்.

“வாங்கிக் கொள்ளம்மா” என கணேசன் சொன்ன பின்னர்தான் தயக்கமாக வாங்கிக் கொண்டாள்.

“உனது சமையல் அருமை பூர்ணா, வாய்ப்பிருந்தால் உன் சாப்பாட்டை சாப்பிடுவதற்காகவே மறுபடி டெல்லி வர பார்க்கின்றேன்.”

“டேய் நீ கிரகபிரவேசத்திற்கு டெல்லி வருவதாகச் சொல்லி இருக்கின்றாய்?” ஆனந்த் நினைவூட்டினான்.

“அன்றைய தினம் தான் முக்கியமான மீட்டிங்க் இருப்பதால் கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் வர முயற்சி செய்வேன் ஆனந்த்” புன்னகைத்தவனாக புறப்பட்டான்.

கலகலவென இருந்த வீடு அமைதியானது போலிருந்தது.

“விகாஷ் அண்ணா இஸ் ஆல்சோ குட் அஸ் ஆனந்த் அத்தான்” (விகாஷ் அண்ணாவும் ஆனந்த் அத்தானை போல நல்லவர்) என்றான் பிரசன்னா.

“ஓஹோ” ஆனந்த் புன்னகைத்து பிரசன்னாவிடம் செல்ல, மறுபடி அரட்டை களைக்கட்டியது.

அமர்ந்து பேச விடாமல் மகளை அடுத்தடுத்து வேலை வேலை என வேலைகள் சொல்லி கணேசன் விரட்டிக் கொண்டே இருக்க ஆனந்த் ஒன்றும் சொல்லவியலாமல் பார்த்து இருந்தான்

‘அவள் மதிய உணவு உண்டாளா இல்லையா?’ என கேள்வி எழுந்தது.

தங்களுக்குள்ளாக இன்னுமே சகஜமாக பேச்சு வார்த்தைகள் இல்லை என்பதால் அவனால் கேட்டுக் கொள்ள முடியவில்லை.

“அப்பா லெட் அக்கா ஈட் ஃபர்ஸ்ட், வொய் யூ ஆல்வேஸ் ஆஸ்க் ஹெர் டு டு சம் ஆர் அதர் வொர்க்?” (அப்பா முதலில் அக்கா சாப்பிடட்டுமே? நீங்கள் ஏன் அக்காவை ஏதாகிலும் வேலை வாங்கிக் கொண்டே இருக்கின்றீர்கள்?”

“ஓ நீ சாப்பிடவில்லையாமா, போய் சாப்பிடம்மா” என்றார்.

“பரவால்ல பா இப்ப பசிக்கலை” என்றவளாக அவர் சொன்ன வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.

“யூ ட்ரீட் அக்கா லைக் செர்வெண்ட் அப்பா” (அப்பா நீங்கள் அக்காவை வேலைக்காரி போல நடத்துகின்றீர்கள்) சொன்ன பிரசன்னா விறுவிறுவென எழுந்து தனது அறைக்குள் சென்று விட்டிருந்தான்.

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!