ஊரிலிருந்து சென்னைக்கு வந்து சிலப்பல மாதங்கள் கடந்திருந்ததால் அவனது மன நிலையில் மிகவும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன, முன்பை விட தன்னம்பிக்கை கூடியிருந்தது.
சமீபத்தில் அவனுடைய அலுவலில் அவனுடைய திறமை காரணமாக சம்பளம் மிகக் கூடி இருந்தது அதனால் இன்னும் அதிகமாய் தைரியம் கூடியது. அதுதான் பெரிய ஆளாக ஆகி விட்டோமே? என தன்னோடு பணிபுரிபவர்களொடு சேர்ந்து குடிப் பழக்கத்தை கற்றுக் கொண்டான்.
பேச்சிலர்களோடு தங்கி இருந்ததால், அவன் வழக்கமாக குடித்து வருவது அண்ணன்களுக்கு கூட தெரியாமல் போயிற்று. நாட்கள் கடந்தன, அவனைப் பற்றி பிறர் அறிந்துக் கொள்ளவும் ஒரு நாள் வந்தது.
அன்று தீபாவளிக்கு முன் தினம், தீபாவளி போனஸோடு கூட ஸ்வீட் பாக்ஸீம் கொடுத்திருந்தார்கள். வேலையிலிருந்து திரும்பும் போதே போதை ஏற்றிக் கொண்டவனுக்கு அன்று ரிஷாவை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருந்தது.
என் மாமன் மகளிடம் நான் காதல் சொல்ல வேண்டும், கட்டித் தழுவ வேண்டும், அவளை அணுஅணுவாக நான் ரசிக்க வேண்டும் என அவனது இரத்தத்தில் சூடு ஏறியது. குடியின் மப்பு ஏற ஏற தாபம் கூடியது.
அவன் அண்ணன்மார்களுக்கும் கூட குடி பழக்கங்கள் இருந்தன தான், ஆனால் யாருமே தாம் குடித்திருக்கையில் மாமா வீட்டுப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை.
மாமா மீது அவ்வளவு மரியாதை. அவர்கள் கட்டி வைத்திருந்த மரியாதையை ஒருவன் கப்பலேற்ற போகிறான் என அன்று அவர்களுக்கு தெரிந்து இருக்கவில்லை.
புறப்பட்ட வேகத்திலேயே சண்முகத்தின் வீட்டை அடைந்தான் சுந்தர். கையிலிருக்கும் ஸ்வீட் பாக்ஸோடு பெருமிதத்தில் உள்ளே நுழைந்தான்.
அவன் யாரைத் தேடி வந்தானோ? அவள் தன் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு தன் பள்ளிக் கூடத்துக் கதை எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
அடர் பிங்க் நிறம் கொண்ட வெல்வெட் துணியில் பாவாடை சட்டை அணிந்திருந்தாள்.
அவளுக்காக தீபாவளியை கொண்டாட அவளுடைய பெற்றோர் வாங்கியிருந்த பல புதுத் துணிகளில் அதுவும் ஒன்று,
அவள் முகம் கழுவி சின்னப் பொட்டுடன், இரட்டைச் சடையில் இருந்தாலும் கூட பார்க்கவே மிகவும் அழகாக இருந்தாள். அம்மாவின் மோவாயை பிடித்துக் கொண்டு, கண்கள் விரிய கைகளை அசைத்து, அசைத்து ஏதோ மிக சுவாரஸ்யமான பகுதியை விவரித்துக் கொண்டிருந்தாள். செல்வியோ மகளின் கதையில் லயித்திருந்தார்.
“அத்தை…” என்றவாறு வந்தான் சுந்தர், அவன் குடித்திருந்தது தெரியாதவாறு சாதாரணமாக நடந்துக் கொண்டான்.
அவனைக் கண்டதும் சற்று மிரட்சி இருந்தாலும் வெளிக்காட்டாமல் எழுந்து அமர்ந்தாள் ரிஷா.
ஏதோ ஒரு பெருமையில் தன் கையிலிருந்த ஸ்வீட் பாக்ஸை நின்றவண்ணம் ரிஷாவின் மடியில் போட்டான் சுந்தர். அவன் வந்ததுமே எழுந்து அமர்ந்திருந்தவள் அந்த ஸ்வீட் பாக்ஸை அவள் மடியில் போட்ட அவனது நடவடிக்கை புரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
செல்வியோ சுந்தரின் அண்ணன்கள் ரிஷாவிடம் விளையாடுவது போலவே அவனும் விளையாடுவதாக எண்ணி சிரித்து நகர்ந்தார்.
மற்றவர்களுக்கு எல்லாம் பதின் வயது குழந்தையாக தெரியும் ரிஷா அவனுக்கு அவனுடைய மனைவியே எதிரில் அமர்ந்து இருந்தார் போல பெரியவளாகத் தோன்றியது. அந்த நேரம் கார்மெண்டிலிருந்து ஏதோ ஒன்று கேட்டு வீட்டிற்கு ஆள் விட்டிருந்தார் சண்முகம்.
சுந்தருக்கு கையில் காஃபியை கொடுத்து விட்டு, சாம்பிள் துணி பண்டல் ஒன்றை தேடச் சென்றார் செல்வி. கணேஷீம், பிரேமா, மற்றும் கீர்த்தி வரவும், அங்கிருந்து நகர்ந்துச் செல்ல கிடைத்தது வாய்ப்பென்று வாயிலுக்கு சென்று விட்டாள் ரிஷா.
வீடு தீபாவளியின் ஒளி வெள்ளத்தில் மினு மினுத்துக் கொண்டிருந்தது.


Leave a Reply