Epi 13_Thurathum Nizhalgal_Jansi

சிறுவர்களோடு மத்தாப்பு சுற்றுவதும், துப்பாக்கியில் ரோல் நிரப்பிக் கொடுப்பதுமாக ரிஷா இருந்தாள். 

உள்ளூர ஏனோ மிகவும் படபடப்பாக இருந்தது. அங்கும் அவளை நிம்மதியாக இருக்க விடாமல் சுந்தர் பிள்ளைகளோடு சேர்ந்து அவளின் எதிரில் அமர்ந்துக் கொண்டான்.

“ஏண்டா கணேஷ், என் கிட்ட கேட்டா நான் நிரப்பி தரமாட்டேனா?” என்ற வாறு ரிஷாவின் கையிலிருந்து பட்டாசை வாங்குகிறதைப் போல அவள் கை முழுவதையும் சுந்தர் பற்றிக் கொண்டான்.

அவனுக்குள்ளாக ஹார்மோன்கள் ஏராளமாக சுரந்து தீப்பற்றிக் கொண்டிருந்தது.

‘இன்றே இவளை தன்னவளாக ஆக்கிக் கொண்டால்தான் என்ன?’, என சாத்தான் அவன் காதுக்குள் வெகுவாய் ஓதிக் கொண்டிருந்தான். 

அவளை அவன் கண்கள் செருக பார்த்துக் கொண்டிருக்க, அவனுக்கேற்ற காமப் பண்டமாய் தெரிந்தாள் ரிஷா. அதை உண்டு புசிக்கும் தவிப்பில் இருந்தான் சுந்தர்.

சித்தப்பா என் துப்பாக்கி…. ஊஊ…”

 கணேஷ் அழுத பின்னரே அவன் கையினின்று ரிஷாவின் கைகளும் துப்பாக்கியும் விடைப் பெற்றன. ரிஷாவின் கைகளோ அதற்குள்ளாக கன்றிப் போயிருந்தன. 

ரிஷாவைப் பொறுத்தவரைக்கும் சுந்தரிடம் முன்பு விளையாடுவாள் தான், கொட்டமடிப்பாள் தான் ஆனாலும் சுந்தரைக் குறித்து அவள் எண்ணம் எல்லாம் தனக்கு நன்கு தெரிந்த உறவினன் என்பது மட்டும் தான். அப்படியாகப் பட்ட உறவினன், முன்பெல்லாம் அனாவசியமாக பேசி இராத உறவினன், சமீபத்திய காலத்தில் வித்தியாசமாக மாறி இருப்பது அவளை மிகவும் கலவரப்படுத்தியது.

யாரிடம் சொல்வதென தெரியவில்லை? அதுவும் என்னவென்றுச் சொல்வது? ஆவன் இவளின் கைகளைப் பிடித்துக் கொண்டானென்றா? அவன் செய்கைகளில் ஏதோ தவறு என்று புரிகின்றது ஆனால் என்ன தவறு என்று சொல்ல தெரியவில்லை, புரியாமல் தவித்தாள்.

அடுத்த நாள் தீபாவளி என்பதால் சண்முகம் கார்மெண்டிலிருந்து மாற்றி மாற்றி ஆட்கள் அனுப்பி, மனைவிக்கு ஏதாவதொரு வேலை வைத்துக் கொண்டிருந்தார்.கூடுதலாக வீட்டில் இருந்த வேலைகள் வேறு செல்வியை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.

ஏதேச்சையாக செல்வி சற்று நேரம் ஓய்வாக இருக்கவும் தான் ரிஷா அவர் மடியில் போய் படுத்து கொஞ்சிக் கொண்டிருந்தது. இப்போது மறுபடியும் அம்மா பரபரப்பாக வேலைகள் செய்துக் கொண்டிருக்க அவரைப் போய் தொல்லை செய்ய அவள் விரும்பவில்லை.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு, என்ற எண்ணத்தில் கேட்டிற்கு உள்ளாக வீட்டின் வெளிப்புறத்தில் சற்று இருட்டான பகுதியில் போய் நின்றது அவளுக்கு பாதகமாயிற்று.

பின்னால் வந்து நின்றவன் விளையாட்டாய் நிற்பது போலவே நின்றுக் கொண்டு, துணிச்சல் மிக அவளது மார்பகத்தை தொட்டே விட்டான். 

விதிர்த்து நிமிர்ந்தவளை பின்புறம் புட்டங்களை வருட, குழந்தையாயினும் பெண்ணாயிற்றே? அவன் தொடுகைகள் ஏதேச்சையானவை அல்ல, திட்டமிட்டு வக்கிர எண்ணங்களோடு செய்யப் படுபவை என உணர்ந்துக் கொண்டாள். 

நேரம் கூட கூட அவனுடைய முறையற்ற வருடல்கள் தொடர்ந்தன, சுவாசிக்கவும் முடியாமல் திணறிப் போனாள் அவள். அவன் கைகளை விலக்கப் பார்த்தாள் முடியவில்லை. திமிறினாள், அவன் பலத்தில் இவளால் அசையவும் முடியவில்லை.

எனக்கு கொடுக்காம யாருக்காக வச்சிருக்கியாம், எப்படி இருந்தாலும் நான் தான உன்னைக் கட்டிக்கப் போறவன், நான் தொடக் கூடாதாக்கும்” 

தன்னை வக்கிரமாய் தொட்டுக் கொண்டு இருப்பவனை, அசிங்கமாய் பேசிக் கொண்டு இருப்பவனை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத அந்த தருணத்தில் தான் அவன் மேல் அருவருப்பின் உச்சமான வெறுப்பு அவள் உள்ளத்தில் எழுந்தது.

பெண்ணின் வெறுப்பு நெருப்பினும் கடினமானது. பெண் மென்மையானவள், தியாகத்தின் திருவுருவம் என பற்பலக் கதைகள் சூட்டி உலகம் அவளை ஏய்த்துக் கொண்டிருந்தாலும், என்று ஒரு நாள் அவள் ஆழ்மனதில் ஒரு மனிதனின் உண்மையான சுயரூபம் தெரிந்து வெறுப்பு சூழ்கின்றதோ, அதை அழிக்க எவராலும் இயலுவதில்லை. 

தன்னுடைய சொந்த வீட்டிலேயே இப்படி ஒரு பாதுகாப்பின்மை  உணர்வு ஏற்பட்டது இதுதான் முதல் முறை என்று அவள் உணர்ந்தாள். 

உள்ளுக்குள்ளாக பயம், அருவறுப்பு, வெறுப்பு என ஏராளமாய் உணர்வுகள் பெருக்கெடுத்தாலும் அதை அந்த சிறுமிக்கு வகைப் படுத்த தெரியவில்லை.

பயமும், மிரட்சியும், அருவருப்பும், வெறுப்பும் சூழ தன்னைக் காத்துக் கொள்ள வழி தெரியாமல், தனக்கு பிடித்த வெடிகளை வெடிக்க இப்போது தனக்கு வாய்ப்பில்லை என உணர்ந்தவளாக, சுந்தர் தன்னை பின் தொடர்ந்து வரவே முடியாத இடம் எது என யோசித்து, அவன் பிடி தளர்ந்த நேரம் மாடி அறைக்கு சென்று அமர்ந்துக் கொண்டாள்.

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!