“அக்கா அண்ட் மாமா ரொம்ப கொஞ்சுஃபையிங்க், அக்கா இக்னோர்ஸ் மீ அண்ட் அப்பா வெனெவர் மாமா கம்ஸ் டு ஹோம்” (மாமா வரும் போதெல்லாம் அக்கா என்னையும் அப்பாவையும் கண்டுக் கொள்வதில்லை. மாமாவும் அக்காவை மிகவும் கொஞ்சுவார்) அக்கா தன்னை கண்டுக் கொள்ளாமல் மாமாவுடன் பேசிக் கொண்டிருந்ததில் தம்பியின் முகம் அஷ்டகோணலானது.
“அப்பா” ஆனந்த் குரல் கொடுத்தான்.
“என்னப்பா?” முத்துராஜ் கேட்டார்.
“நீங்க பாப்புவைதான் கொஞ்சுவீங்களாம், உங்க மருமகனை கொஞ்ச மாட்டீங்களாமாம்… வருத்தப் படுறான்” என பிரசன்னாவை போட்டுக் கொடுத்தான்.
“அத்தான் திஸ் இஸ் டூ மச்… ஐ டிண்ட் செட் தேட்” ஆனந்தை முறைத்தவன்
“மாமா ஐ டிண்ட்…. நான் அப்படி சொல்லுதில்ல மாமா” குரல் கொடுத்தான்.
“வாடா வாடா என் மருமவனே உன்னை கொஞ்சாமலா?” அருகில் வந்தவர் அவனை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டார் அடுத்த நொடியே இறக்கியும் விட்டார்.
பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு சிரிப்பு அடக்க முடியாமல் போக, வாயை பொத்திக் கொண்டு சிரித்தவள் சத்தமாய் சிரித்து விட்டாள். அடுத்த நொடி அப்பாவை பார்த்ததும் தனது சிரிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தும் விட்டாள்.
அந்த ஒரு நொடிச் சிரிப்பில் ஆனந்த் இலயித்திருந்தான், வழக்கம் போல அவளது சிரிப்பையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாமா மீது மன வருத்தம் எழுந்தது.

