அப்போதுதான் கணேசனுக்கு அழைப்பு வர பேசி வந்தவர் “பாப்பு சாயங்காலம் மாப்பிள்ளை வீட்டிலருந்து வராங்க, தயாரா இரு என்ன?” என அறிக்கை இட்டார்.
சரியென தலையசைத்தவளிடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. கணேசன் பார்க்கும் மாப்பிள்ளை எப்படி இருப்பார் என இவனுக்கு சந்தேகம் வராமலில்லை. எதற்கும் இன்று ஊர் சுற்றுவதாக திட்டமிட்டு இருந்ததை இரத்து செய்து விட்டு அன்றைய தினம் மாமாவின் வீட்டை விட்டு எங்கும் செல்வதாக இல்லை என கங்கணம் கட்டிக் கொண்டவன் போல அங்கேயே டேரா போட்டான்.
“ம்ப்ச்ச் அப்பா…” சலித்தவாறு அருகில் அமர்ந்த பிரசன்னாவிடம் என்னவென்று கேட்டான்.
“டுடே வி… மீன்ஸ் மீ அண்ட் அக்கா ப்ளான் டு கோ ஃபார் ஷாப்பிங்க் அத்தான்… பட் அப்பா” (நானும் அக்காவும் இன்றைக்கு கடைக்கு செல்வதாக இருந்தோம் அத்தான் ஆனால் அப்பா இருக்காரே…)
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றது குறித்து சொல்லுறியா? அக்காக்கு கல்யாணம் ஆகிரும்னு கவலையா பிரசன்னா?”
“ம்ம் நாட் லைக் தேட், ஐ டிண்ட் லைக் தேட் பர்சன், ஐ செட் அக்கா சே நோ ஃபார் திஸ், பட் ஷீ ம்ப்ச்ச்” (அப்படியில்லை அத்தான், எனக்கு அந்த நபரை பிடிக்கவில்லை. அக்காவிடம் உனக்கு இந்த நபரை பிடிக்கவில்லை என அப்பாவிடம் சொல்லு எனச் சொன்னேன்… அக்காவோ ம்ப்ச்ச்)
“என்னவாம் உங்க அக்காக்கு?”
“ஷீ இஸ் சேயிங்க் அப்பா நெவர் ஆஸ்க்ட் மீ தேட் ஐ லைக் தேட் பர்சன் ஆர் நாட் தென் ஹவ் கேன் ஐ டெல் ஹிம்”
அப்பா என்னிடம் விருப்பமா இல்லையாவென கேட்கவே இல்லையே நான் எப்படி விருப்பமில்லை எனச் சொல்வதாம் என அக்கா சொன்னதாக பிரசன்னா சொல்லவும் புதிராக விழித்தான். அவனுக்கு புரிந்த வரையில் பாப்புவுக்கு இந்த மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வரும் விஷயங்கள் பிடிக்கவில்லை ஆனால், அவைகளுக்காக அவள் போராடவும் இல்லை. இவள் ஏன் இப்படி இருக்கின்றாள்? என்ன செய்ய எண்ணி இருக்கின்றாள்? ஹாலில் அமர்ந்து பாப்புவை இன்னும் கவனமாக கவனிக்க ஆரம்பித்தான்
சாயங்கால நேரமாகவுமே கணேசன் மகளை விரட்ட ஆரம்பித்து விட்டிருந்தார்.

