“எனக்கும் தெரியும், இந்த கல்யாணம் வேண்டாம்னு எப்படியாவது தடுத்திருங்க மாமா…எனக்கு வேலைக்கு போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தா.”
“அப்புறமும் நீங்க கல்யாண பேச்சு பேசறீங்க?”
“கணேசனுக்கும் வயசாகுதில்ல? கொமரை (குமரி) எத்தன காலம் வீட்டுல வச்சிட்டு இருப்பாங்க? சின்ன புள்ள தெரியாமல் பேசுறா… புரிய வைக்கலாமுன்னு இருந்தேன்.”
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சரியில்லப்பா… பாப்புவை மட்டமா பேசினாங்க”
“கல்யாணம்னா சும்மாவா… நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க, அதெல்லாம் கண்டுக்கக் கூடாது, மாப்பிள்ளை பொண்ணு பொருத்தமிருந்தா போதும்.”
“அது கூட இல்லைப்பா அந்த ஆளை பார்த்தீங்கள்ள… எவ்வளவு கருப்பு, ஒல்லி…பாப்புக்கு சுத்தமா அந்த ஆள் பொருத்தமே இல்லப்பா”
“அதெல்லாம் அவ பார்த்துக்குவா… நீ வந்தமா, ஊரை சுத்திட்டு திரும்ப உன் நாட்டுக்கு போனோமான்னு இருப்பியாம்”
“அப்பா இதுதான் என் நாடு”
“பத்து வருசத்துக்கு ஒரு தரம் வர்றவனெல்லாம் என் நாடுன்னு பெரும பேசக் கூடாது சொல்லிட்டேன்”
“இனிமேல ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வரணும்னு தான் இங்கே வீடு கூட வாங்கினேன்”
“உன்னை நம்ப முடியாதப்பா”

