Epi 18_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“அவ இருந்தா மட்டும் என்னை மீறியா போயிருவா? அவ என் பொண்டாட்டிடா?”

“இப்ப முடிவா என்னதான் சொல்ல வர்றீங்க?”

“ஊர் பக்கம் வந்தா கண்ணுக்கு அழகான பொண்ணுங்களை பார்த்தா ஆசையாதான் இருக்கும், அதெல்லாம் கொஞ்ச நாளத்து ஆசை. அப்புறமா நீ வேலையா போனின்னா உனக்கு எங்க நினப்பே இருக்காது. உன்னை நம்பி நான் பொண்ணு கேட்க மாட்டேனப்பா”

“எனக்கு இந்த வயசுல இன்ஃபாச்சுவேசன்னு சொல்லுறீங்களா? எனக்கு இன்ஃபாச்சுவேசனுக்கும் விருப்பத்துக்கும் நல்லா வித்தியாசம் தெரியும். அதெல்லாம் இரண்டும் வேற வேற, எனக்கு பாப்புவை பிடிச்சுருக்கு. அவளுக்கும் என்னை பிடிச்சுருந்தா கட்டி வைங்க”

“அதான் நீ அடிக்கடி இந்த வயசு, இந்த வயசுன்னு சொல்லுறிய உனக்கே வயசு புரியுதுதானே? போ போய் தூங்கி எழும்பு காலையில இதெல்லாம் மறக்கலைன்னா நாம மறுபடி பேசலாம்” என மகனை கத்தரித்து விட்டார்.

ஆனந்த் இப்போது தியேட்டர் ஓனரான சத்யராஜிடம் சம்பளம் கூட்டி கேட்க வந்து வெறுப்பாகி திரும்பச் செல்லும் வடிவேலுவின் மன நிலையில் இருந்தான்.

தன்னை கடுப்புடன் பார்த்துச் செல்லும் மகனை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார் தந்தை.

தனது அறைக்குள்ளாக குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டு இருந்தவன் விகாஷீக்கு அழைத்தான்.

ஆச்சரியத்துடன் அழைப்பை ஏற்றவன் “ஹே படி(buddy) எப்ப வர்ற, போனவன் போனவன் தான் திரும்ப வரக் காணோம்?”

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!