Epi 18_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“இனி மேரேஜ் முடிச்சுட்டுதான் வர்றதா இருக்கேன்”

“வாவ் தட்ஸ் அ குட் நியூஸ்? யார் அந்த லக்கி கர்ள்?”

“பாப்பு” எனச் சொல்லும் போதே இவனது குரல் இறங்கியது… “இன்னும் அவளிடம் விருப்பம் கேட்கவில்லை” எனவும் சொன்னான்.

“பாப்புவும் சம்மதித்து உங்களது திருமணம் நிகழ்ந்தால் அதுதான் உனது வாழ்வின் மிக புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்…. ஐயாம் வெரி ஹாப்பி ஃபார் யூ” என தனது மகிழ்வை வெளிப்படுத்தினான்.

தனக்கும் தந்தைக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை சொன்னான். அவன் சொல்லச் சொல்ல விகாஷ் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான்.

“உங்கப்பா இருக்காரே…”

“இப்ப உனக்கென்னடா சிரிப்பு?”

“உனக்கு புரியலையா?”

“என்னது?”

“அவர் உன்னை சோதிச்சு பார்க்குறார்..”

“எதுக்கு?”

“உண்மையாவே நீ உன் பாப்புவை விரும்புறியா இல்லை, சும்மா ஏதோ தோணுதுன்னு கேட்டியான்னு சோதிச்சு பார்க்க விரும்பி இருக்கிறார். உனக்கு புரியலையா?”

சட்டென்று மனதில் இருந்த பாரம் குறையவும், “ஊப்…” பெருமூச்செறிந்தவன் “அப்படியா சொல்லுற?”

“ம்ம்…”

“அப்ப சரி… கொஞ்ச நேரத்தில கதிகலங்கிட்டேன்”

“உண்மையாவே உனக்கு பாப்புவை விருப்பமா?”

“ஏன்டா இப்ப நீயுமா?”

“சொல்லேன், தெரிஞ்சுக்கிறேன்”

“ம்ம்… பாப்பு எனக்கு எப்பவுமே ரொம்ப ஸ்பெசல் தான்… ஆனால், இப்ப கவனிச்சப்ப எனக்கு அவளோட இருக்கிறபோது ரொம்ப சந்தோசமா இருக்குடா… அவ முன்னை போல இல்லை… இறுகிப் போயிருக்கிறா… அவளை முன் போல சகஜமாக்கணும்… நிறைய சிரிக்க வைக்கணும் என்றெல்லாம் ஆசை வருது.”

“என்ன பரிதாபமா?”

விகாஷ் கேட்டு வைத்தது போலத்தான் அடுத்த நாள் பாப்புவும் ஆனந்திடம் கேட்டு வைத்தாள்.

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!