Epi 18_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“என்ன என் மேல பரிதாபமா அத்தான்?”

“ஏன் உன் கை கால் உடைஞ்சு நொண்டியா இருக்கியா? உன் மேல நான் பரிதாபப்பட?” அவன் சொற்கள் கோபத்தில் வள்ளென விழுந்தன. அவள் வருந்தி முகம் கூம்புவதற்கு பதிலாக புன்னகைத்தாள்.

“உங்களுக்கும் எனக்கும் எப்படி பொருந்தும்?”

“ஏது வயசா?” ஆரம்பிக்கும் முன்னதாக கை நீட்டி தடுத்தாள்.

பிரசன்னா பள்ளிக்குச் சென்றதால் இவர்கள் பேச ஏதுவாக அமைந்து இருந்தது.

“வயசை சொல்லலை, ப்ரொஃபஷன்… உங்களோடது ஷோ பிசினஸ்… நான் டீச்சர்… நம்ம இயல்பும் அது போல மாறுதுதானே அத்தான்?”

“ஒரு டீச்சர் இன்னொரு டீச்சரைதான் கட்டணும், ஒரு டாக்டர் இன்னொரு டாக்டரைதான் கட்டணும்னு எல்லாம் லூசு மாதிரி ஏதாச்சும் கொள்கை வச்சுருக்கியா என்ன? மனுசங்களுக்குதான் கல்யாணம் ப்ரொஃபஷனுக்கு இல்லை.”

“இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கே”

“அதெல்லாம் ஒவ்வொன்னா சால்வ் செய்யலாம்… எனக்கு உன் கிட்ட ஒரே கேள்விதான் உனக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லியா?”

“…” சிரிக்க முயலும் அதரங்களை அடக்கிக் கொண்டவளாக அவனை பார்த்திருந்தாள்.

“எனக்கு உன் கிட்ட இன்னொரு கேள்வியும் இருக்கு…”

“ஒரே ஒரு கேள்விதான்னு சொன்னீங்க?”

“நான் கணக்குல வீக் சரியா… இப்ப இன்னொரு கேள்வி… உன்னால என்னை கட்டிக்க முடியுமா? முடியாதா?”

அவள் அதே பார்வையில் அவனை பார்த்திருக்க,

“இப்ப என்ன? எனக்கு வாழ்க்கை கொடு பாப்புன்னு உன் காலில் விழணும்னு நினைக்கிறியா?” கடுப்பாக கேட்க கலகலவென சிரித்தாள் அவனது பாப்பு.

தொடரும்

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!