Epi 18_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“அப்ப நீங்க எனக்காக கணேசன் மாமாக்கிட்ட பேச மாட்டீங்க?”

“மாட்டேன்”

“இப்ப எனக்கு என்ன குறை?”

“குறை எதுவும் இல்லை, எல்லாம் கூடுதலா இருக்கு… பாப்பாவை விட நீ பதினோரு வயசு பெரியவன்”

“அப்பா பத்து வயசுதான்…”

“இருந்தாலும் வயசு வித்தியாசம் ரொம்ப அதிகம்”

“நீங்க பார்த்த மாப்பிள்ளைக்கு மட்டும் வயசு அதிகமில்லையோ?”

“அந்த பையன் பாப்பாவை விட ஏழு வயசுதான் பெரியவன்”

“ஆனா பார்க்குறதுக்கு அந்த மாப்பிள்ளை தாத்தா மாதிரி இருக்கான்… நான் என்ன அப்படியா இருக்கேன்?”

“கணேசனுக்கு கவர்மெண்ட் வேலை பார்க்குற மாப்பிள்ளை தான் வேணுமாம்”

“அதுக்காக நான் இந்த வயசில கவர்மெண்ட் ஜாப்கு படிச்சு பாஸாகவா முடியும். நானும் நிறைய சம்பாதிக்கிறேன்… கோடிக்கணக்கில பணம் சேர்த்துருக்கேன், பாப்புவை நல்லா பார்த்துப்பேன்.”

“உள்ளூர் மாப்பிள்ளைதான் வேணும்னு சொன்னான்.”

“நீங்கல்லாம் ஒரு அப்பாவா? இதே நேரம் எங்க அம்மா இருந்திருக்கணும், இராத்திரி நேரம்னு கூட பார்க்காம பொண்ணு கேட்க போயிருப்பாங்க” முறைத்தான்.

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!