Epi 3_Manadhoram Unthan Ninaivugal

தனக்கு கொடுக்கப் பட்ட விலாசத்தைக் காட்டி தனக்கு அனுப்பப்பட்டு இருந்த அந்த வீட்டின் அழகான மாடி அமைப்பின் புகைப்படத்தை மறுபடி, மறுபடி சரி பார்த்து அவள் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கின்றாள் என உணர்ந்து அங்கு இறங்கினாள். 

இப்போது காலை மணி பதினொன்றாகி இருந்தது.அந்த சுற்றுப் புறமும் இரண்டு மாடி வீடும் அம்சமாக இருந்தது. வீட்டு உரிமையாளர் இரண்டாம் தளத்தை வாடகைக்கு விட்டிருப்பதாக சக ஊழியர் ஒருவர் சொல்ல, விபரம் சேகரித்து இருந்தாள்.

இரண்டு தள வீட்டிற்கு அல்லது பங்களாவில் மின்தூக்கியும் இருந்தது. இரண்டு பெட்டிகளோடு இரண்டாம் மாடி எப்படி ஏறுவது? என திகைத்தவளுக்கு மின்தூக்கியைக் கண்டதும் ஆசுவாசமாயிற்று.

இரண்டாம் மாடியில் இறங்கி பெட்டிகளை இறக்கி அழைப்பு மணியை அழுத்தவும் கதவை திறந்த அந்த முதியவர் இவளது பொருட்களை வைக்க வேண்டிய அறையை காட்டி அவளது பெட்டிகலை அங்கு கொண்டு போய் வைக்க அவளுக்கு உதவியும் செய்தார்.

தான் இரவு தூங்காமல் இருந்ததால் கண்கள் கரித்ததையும் பொருட்படுத்தாமல் மீரா அடுத்த ஒரு மணி நேரத்தில் அலுவலகம் செல்ல ஆயத்தமானாள். “ஓலா”வில் வாடகை ரிக்ஷா பதிவு செய்து வரவழைத்து தனது அலுவலகத்திற்கு விரைந்தாள்.

அலுவலகத்திலோ யாரை சென்றுப் பார்க்க வேண்டும் என அவளுக்கு விபரம் தெரியவில்லை. இவளையும் இவளது மடிக்கணிணியையும் பலமுறைகள் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

உள்ளே சென்றதும் தனக்குச் சொல்லப்பட்ட இடத்தில் தனது தோள்பை மற்றும் மடிக்கணிணி பையையும் எடுத்து வைத்தாள்.

அலுவலக ஏசியின் குளுமை களைப்பாக இருந்த மீராவை கண்களைச் சொக்க வைத்தது. தனது மடிக்கணிணியை உயிர்ப்பித்து சில மின்னஞ்சல்களுக்கு பதிலளித்தாள். இனி ஹைதராபாதில் செய்ய வேண்டிய வேலைகள் தெரிந்த பின்னரே அடுத்து என்னச் செய்ய வேண்டும் என வரிசைப்படுத்த வேண்டும் என எண்ணி மடிக்கணிணியை லாக் செய்தாள்.

அந்த பெரிய இடத்தின் கண்ணாடிக் கதவு சட்டென்று திறந்தது.

“ஹாய், நீங்கள் தான் மீராவா?” புன்னகைத்தவாறு ஆங்கிலத்தில் பேசி தன்னருகில் வந்தவனை மீரா கண்கொட்டாமல் பார்த்தாள். அவன் உருவமும் ஆஜானுபாகுவானத் தோற்றமும் பார்க்க, சாதாரணவல்ல மிக மிக அழகன் வகையறாவில் வரக்கூடியவனாக இருந்தான்.

“இவன் தான் கார்த்திக்கோ?” பார்த்தபடியே தனது சிந்தனையில் ஆழ்ந்தாள்.

“ஹைதராபாதில் கார்த்திக்கின் கீழ் பணிபுரியப் போகிறாய்” என சுஜித் சொல்லவும் அவன் மேல் இவளுக்கு நல்ல அபிப்ராயங்கள் இல்லாத போதிலும், சமூக வலைத்தளங்களில் எங்கும் இல்லாத, ஒருபோதும் குழுவினர் புகைப்படங்களிலும் கூட கண்டிராத அவனைக் காண அவளுக்கு ஆர்வம் எழுந்திருந்தது என்னமோ உண்மைதான்.

“ஹாய்… யெஸ் நான் தான் மீரா”, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“நான் தான் பாஸ்கர், ப்ரொசஸ் ஹெட் ஆஃப்……” தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“ஓ” முறுவலித்தாள்.

Pages: 1 2 3 4


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *