Epi 4_Manadhoram Unthan Ninaivugal

அத்தியாயம் 4_ மனதோரம் உந்தன் நினைவுகள்

அத்தியாயம் 4

இதயக் கொள்ளளவு

உந்தன் பார்வைகளிலும்,

அகத் தீண்டல்களிலிலும்

இடையறாமல் பொழியும்

காதல் மாமழையில்

பெருக்கெடுத்து நிறைகின்றது

என் இதய அணை.

கொள்ளளவு மிகுந்து

உடைப்பெடுக்கும் முன்னே 

சேதாரங்கள் தவிர்க்க வந்து விடேன்

உந்தன் காதல் சொல்லி விடேன்.

ஹைதராபாதில் தனது முதல் நாளை முடித்து அலுவலகத்தினின்று கெஸ்ட் ஃஹவுஸிற்கு திரும்ப வரவேண்டி புறப்பட்டு நின்ற மீரா, தான் சென்ற நேரம் முதலாக எதிர்பார்த்திருந்த கார்த்திக்கை எதிர்பாராத நேரத்தில் சந்திக்க நேர்ந்தது.

அவனுக்கு முகமன் கூறி கைகுலுக்கி, சம்பிரதாய வார்த்தைகள் பேசி அவ்வளாகத்திற்கு வெளியே வந்தாள். 

அவ்வளாகத்தின் வெளியே ஷேர் ஆட்டோக்களும், மனைவியரை அழைத்துச் செல்ல வந்திருக்கும் கணவர்களின் பைக்குகளுமாய் அந்த மொத்த சாலையும், சுற்று வட்டார இடமும் அமளி துமளிப்பட்டுக் கொண்டு இருந்தது.

தான் அலுவலகத்தினின்று திரும்ப வந்த அந்த ஆறு முதல் ஆறரை மணியிலான நேரம் அந்த காம்பஸில் உள்ள பெரும்பாலான அலுவலகத்தினின்றும் பணிபுரிவோர் வீட்டிற்கு திரும்பும் வழக்கமான நேரம் என அவள் அப்போது புரிந்துக் கொண்டாள்.

தனது அலைபேசியை எடுத்து ஓலா ரிக்ஷா பதிவுச் செய்ய அடுத்த அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னரே அவளுக்கு ரிக்ஷா கிடைத்தது. வீட்டிற்கு வந்தவள் தன் பெட்டியில் பத்திரமாக வைத்திருந்த மேகி நூடுல்ஸ் செய்து இரவுணவை முடித்துக் கொண்டாள்.

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *