அத்தியாயம் 3 _ துரத்தும் நிழல்கள்_ஜான்சி

அத்தியாயம் 3
ட்ரெயின் மெதுவாக நகரத் தொடங்கி விட்டிருந்தது. கம்பார்ட்மெண்டுக்குள்ளாக கூட்டமாய் ஆட்கள் அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். டாய்லெட்டுக்குள்ளாக இருந்த போதிலும் எதனால் திடீரென இத்தனை நபர்கள் இரயில் பெட்டியில் ஏறி ஓடிக் கொண்டு இருக்கின்றனர்? ஏன் இப்படி? என மனதில் எழுந்த கேள்விகளும், அதனால் எழுந்த பரபரப்பை ரிஷா எண்ணினாலும், அவள் அளவிற்கு கூட ஷாரதா பதட்டம் அடையவில்லை. வெகு நிதானமாக ரிஷாவின் தலை முக்காட்டை சரி செய்து அட்ஜஸ்ட் செய்தவர். தன்னுடைய பையை எடுத்து அவளது தோளில் மாட்டினார்.
“ரிஷா” என்றழைக்க
அவரது ஆழ்ந்த குரலில் ஆட்பட்டவளாய் அவரை நோக்கினாள்.
“இப்ப நாம வெளியே போனதும் நீ நாம அமர்ந்திருந்த அதே சீட்டில் போய் உக்காருற ஓகே.’
“…”
“எனக்கு என்ன நடந்தாலும்…”
அவளது முகவாயை நிமிர்த்தி தன் கண்களை அவள் கண்களோடு சந்திக்க வைத்தார் ஷாரதா, அவரது கண்களை ரிஷா பார்த்த பொழுது அதில் அதே தீர்க்கமான பார்வையோடு, நெருப்பு கொழுந்து விட்டெரியும் கூர்மையும் கண்டாள். உடல் சில்லிட்டது போன்ற உணர்வு எழுந்து அடங்கியது.
“நான் என்ன சொல்றேன்னா… எனக்கு என்ன நடந்தாலும், நீ வெறும் பார்வையாளரா மட்டும் தான் இருக்க போற, எனக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லாதது போலவே நடந்துக்கணும் சரியா?”
“ம்ம்…”
ரிஷாவின் தலை தானாகவே அசைந்து சம்மதம் தெரிவித்தது.
“இன்றைக்கு உன்னை விட்டு நான் பிரிய நேர்ந்தாலும், இன்னும் சில மணி நேரங்களில் மும்பை வந்ததும் இந்த பையில் இருக்கிற விலாசத்துக்கு நீ போய் சேர்ந்தாகணும். அதுவரைக்கும் உனக்கு தேவையான அளவு பணம் பையில் வச்சிருக்கேன். டெபிட் கார்ட் இதில் இருக்குது பையை சுட்டிக் காட்டியவர் அதோட கூடவே பாஸ்வர்ட்-ம் இருக்குது, இதெல்லாமே இருந்தாலும் நீ அந்த விலாசத்துக்கு போகிறவரைக்கும் டெபிட் கார்ட் உபயோக படுத்தக் கூடாது… என்ன புரியுதா?”
“ம்ம்” மறுபடி தலையாட்டி சம்மதம் தெரிவிக்க,
“எல்லாரோட போன் நம்பர்களும் டைரில இருக்கு ஆனா, வீட்டுக்கு போய் சேரும் வரை யாரையுமே நீ தொடர்பு கொள்ள கூடாது ஓகே.”
“ம்ம்… “
ஆடாய் தலையாட்டியவள் மீது சற்றே பரிவு வந்ததோ என்னமோ மெலிதாய் இளக்கம் வந்துப் போக அதைக் காட்டிக் கொள்ளாமல் ஷாரதா முகத்தை கடினமாக்கிக் கொண்டாள்.


Leave a Reply