தடியன்கள் ஷாரதாவை செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருக்க, அவரின் எதிர்தாக்குதல்களொ நிற்கவில்லை, மற்ற கம்பார்ட்மெண்டிலிருந்து வர வேண்டி இருந்த நபர்கள் வர முடியாத நிலையில் ஆறேழு நபர்கள் மட்டுமே அங்கு ஷாரதாவை சுற்றி இருந்தனர். அவரை தடுத்து நிற்பாட்டுவதும் விசாரிப்பதுமே அவர்கள் தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தனர். கைகள் விடுபடும் போதெல்லாம் அவர்கள் ஷாரதாவால் தாக்கப் பட்டுக் கோண்டிருந்தார்கள். அவர்கள் நோக்கம் அவரை அடிப்பதொன்றாக தெரியவில்லை. செல்பவரை தடுக்கவும், அங்கேயே நிறுத்தி வைத்து ஏதோ விளக்கம் கேட்பதுமாக இருந்தது. முடி கலைந்து ஆக்ரோஷமாக நின்றுக் கோண்டிருந்தார் ஷாரதா.
ஷாரதாவின் மிதியால் தட்டு தடுமாறி விழுந்த முதலாமவன் எழுந்து வரவும், மறுபடி ஏதோ வாக்குவாதம் நடக்க அடுத்த தாக்குதல் ஆரம்பித்தது.
மறுபடியும் ஷாரதா அங்கிருந்து நகர முயல, அவரது கைகளிரண்டுக்கும் இடையே அக்குளில் தன் கைகளை விட்டு பின் மண்டைப் பகுதியில் கோர்த்துக் கொண்டான் ஒருவன். தலையை நிமிர்த்தவே இயலாமல் அவன் பிடிக்குள் அவர் மாட்டிக் கொள்ள அவரைத் தொட மற்றவன் அருகில் வர, ஷாரதா தன் இருகைகளையும் முன்னே நீட்டி ஒன்றையொன்று இறுக்கமாய் கட்டிக் கொண்டு, தன் நெற்றியை அழுத்தி பலமாய் பின்பக்கம் இடித்து, இரு கைகளையும் அதே வேகத்தில் இருபுறமும் இறக்க அவரைப் பிடித்தவனின் கைகளினின்று விடுபட்டார்.
தரையில் ஓங்கி வலக்காலை மிதித்து, இன்னும் தன்னைப் பிடித்தவன் பின்னால் நிற்க அவன் காலுக்குள்ளாய் காலிட்டு இடறி விழச் செய்து தாக்க அவன் மண்டைக்குள் ஒரே நேரத்தில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன.
சுழன்று, சுறன்று ஒவ்வொருவனாய் தாக்கிக் கொண்டு தற்காத்துக் கொண்டிருந்தவர் சட்டென்று இரெயில் நடுவழியில் நின்றிடவும் அனைவரையும் தள்ளிக் கொண்டு வெளியில் பாய்ந்தார்.
“விடாதீங்கடா…”
வெறி பிடித்தவர்களாக அத்தனை பேரும் ஷாரதாவை துரத்திச் செல்ல, சற்று நேரத்தில் அந்த கம்பார்ட்மெண்டில் அமைதி சூழ்ந்தது. சண்டையைப் பார்த்து வாயடைத்துப் போன அத்தனை பேர்களும் உடனே சலசலக்க தொடங்கினர்.
“வோ இதர் ஹீ தோ பைட்டி தீ” (இங்கேதானே அவள் அமர்ந்திருந்தாள்)
“உஸ்கே சாத் ஏக் அவுர் லட்கீ பீ தீ” (அவளோடு இன்னுமொரு பெண்ணும் இருந்தாள்)
ரிஷாவின் அருகில் இருந்தவர்கள் புர்காவில் இருந்தவளை அறிந்துக் கொள்ளாமல் பேசிக் கொண்டிருக்க, நடந்தவற்றின் பிரமிப்பு, அதிர்ச்சி அகலாமல் சண்டை நடைப் பெற்ற இடத்தையே வெறித்துப் பார்த்தவாறு இருந்தன ரிஷாவின் கண்கள்
தொடரும்


Leave a Reply