Epi 5_Thurathum Nizhalgal_Jansi

டாக்ஸி ஸ்டேண்ட் எங்கிருக்கிறது எனத் தேடி அந்த நெருக்கடியான இடத்தை விட்டு நகர்ந்துக் கொண்டிருந்தவளுக்கு,

நீ.. நீ.. ரிஷா பாப்பா தானே?”

 எனக் கேட்ட குரலை அடையாளம் கண்டுக் கொண்டவளாய் நிமிர்ந்தவள் சற்றுத் தொலைவில் தம்மையே பார்த்துக் கொண்டிருந்தவரைக் கண்டு உள்ளும் புறமும் கிடுகிடுவென நடுங்க, தான் வந்த வேலையை மறந்து இந்தர் சற்று முன்பு ஏறின பஸ் கண்ணுக்கெட்டிய தூரத்தில் நிற்க அதில் வெடுவெடுவென ஏறி அமர்ந்தாள்.

பஸ்  கூட்டத்தின் நடுவே உர்ர் உர்ர் ரென சப்தம் எழுப்பி ஆடி அசைந்து நகர்ந்து இரயில் நிலையத்தின் அருகிலிருந்த ஜன நெருக்கடி மிக்க பகுதியில் இருந்து விலகியதும் வேகம் எடுத்தது.

*****

எங்கோ இருவர் அலைபேசி சம்பாஷனை

அவள தூக்கிட்டீங்களா?”

“பாஸ், எப்படியோ மிஸ் ஆகிட்டாங்க பாஸ்

“அதென்ன அந்த ####க்கு  மருவாத வேண்டி கிடக்கு ஆகிட்டான்னு சொல்லு.”

“…..”

“நீயெல்லாம் $$### சொன்ன வேலை கூட செய்ய முடியல த்தூ…”

“…..”

ஒரு அசிங்கமான கெட்ட வார்த்தையை மறுபடி உதிர்த்தவன். அவ எல்லாம் எப்பவே செத்து தொலைஞ்சிருக்க வேண்டிய பீடை. மூதேவி எத்தனை முறை முயற்சி செஞ்சும் பிழைச்சுடுறா? எப்படின்னு தெரியலியே?”

“…..”

“ஏண்டா ###$$ கபோதிகளா? அதுதான் கத்த கத்தையா ரூபாய வாங்கி தொலைச்சீங்கள்ல ஒரு பொம்பளைய உங்களால தூக்க முடில நீங்கல்லாம் $$###”

“…..”

 ”இத்தனை செக்யூரிட்டிக்கு நடுவில நாங்க கன்(Gun)னோட ரயில்வே ஸ்டேஷனுக்குள்ளெ நுழைஞ்சு, சுட முயற்சி செஞ்சதே பெரிய விஷயம் சார். திடீர்னு யாரோ ஒருத்தன் வந்து அந்த பொண்ணை அந்த ஸ்பாட்லருந்து அழைச்சுட்டு போயிட்டான் பாஸ். கூட்டத்தில நாங்க போயிருந்தா மாட்டியிருப்போம், அதான் திரும்ப வந்துட்டோம். ட்ரேஸ் பண்ணிட்டிருக்கோம். இன்னிக்கு தூக்கிருவோம்.”

கதைய முடிக்கச் சொன்னா கதைச் சொல்லாதீங்க வெண்ணைகளா….”

எதிர்முனை சட்டென்று துண்டிக்கப் பட்டதிலிருந்து ஆத்திரம் புலப்பட்டது.

தொடரும்

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!