“அதை தெரிஞ்சுகிட்டு நீ என்னச் செய்யப் போற?”
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே ட்ரெயின் அடுத்த ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டு இருந்தது.ஏற்கெனவே இவர்கள் வாக்குவாதத்தில் சில ஸ்டேஷன்கள் கடந்து சென்று விட்டிருக்க உள்ளே ஏறும் , வெளியே இறங்கும் வெகு ஜனக் கூட்டங்களை கண்டுக் கொள்ளாமல் வாக்குவாதம் செய்திருக்க,
சரி நான் இங்கேயே இறங்கிக்கிறேன். சம்பந்தமே இல்லாம இந்த ரயில்ல என்னை இழுத்து போட்டுகிட்ட, இல்லன்னா நான் இந்நேரம் பாதி வழி போயிருந்திருப்பேன்.
அவளது முறைப்பாடைக் கேட்டுக் கொள்ளாதவனாக,
“நீ எங்கே போகணும்?”
”இவனிடம் எதற்காக சொல்ல வேண்டும் என்றெண்ணியவள் ஏதோ தோன்ற ‘அந்தேரி, சாத் பங்களா’ எனவும்,
“அப்படின்னா இங்கே இறங்காதே, அடுத்த ஸ்டேஷன்தான் அந்தேரி. அங்கே இருந்து நீ செல்ல வேண்டிய இடம் கிட்டேதான்.”
சொன்னவனை ரிஷா நம்பாத பார்வை பார்க்கவும் இரயில் நிலையத்தில் நிற்க வெளியே எட்டிப் பார்த்தாள் ரிஷா. இந்த ஸ்டேஷன் பெயர் வில்லே பார்லே என்றிருந்தது அடுத்த ஸ்டேஷன் தான் அந்தேரி என தன் மொபைலை எடுத்து ரயில் நிலைய அட்டவணையை காண்பித்தான்.
இந்தர் காண்பித்த அட்டவணையைப் பார்த்து நம்பிக்கைக் கொண்டவள், கூட்டமே இல்லாத ரயில் குறித்து வியப்பாக இருந்தாள். இது சாயங்கால நேரம் அதான் சர்ச்கேட் போற ட்ரெயின்கள்லாம் கூட்டம் குறைவா இருக்கும். என தானாகவே இந்தர் பேச,
’லூஸ்டாக் ஆரம்பிச்சுட்டான்யா?’ என எண்ணிக் கொண்டாள் ரிஷா.
பழக்கமில்லாத ஊரில் தாய்மொழி பேசும் மனிதனைக் கண்டுக் கொண்டதாலோ என்னமோ? அல்லது அந்த துப்பாக்கி குண்டுகள் தன்னை நோக்கி வரவில்லை இந்த இந்தரை நோக்கியே வந்தன என்பதாலோ என்னவோ? அல்லது தான் செல்லவிருந்த இடத்திற்கு போய்ச் சேர இன்னும் சில மணித்துளிகளே உள்ளன என்பதாலோ என்னவோ? அவள் மிகுந்த மன நிம்மதியோடு இருந்தாள். அவளது மன நிம்மதிக்கு ஆயுள் குறைவு என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.
“இந்தர்…”
வெகு நாள் பழகியவளைப் போல அழைப்பவளை ஏறெடுத்துப் பார்த்தான் அவன். அவளது முகமும், அந்த பட்டுச் சருமமும், அழகும் அவனை தடுமாறச் செய்தது.
அவனும் ஆண்தானே? என்னச் செய்வான்?
கூட்டத்திலும் வெகுவாக கதை கேட்கும் சுவாரசியத்தில் தன்னைக் கூப்பிட்டவளை அலட்சியமாக பார்த்தான்.
“என்ன?” எனக் கேட்டவனின் உதடுகள் எகத்தாளமாக வளைந்திருந்தன.
”இல்ல உன்னை எதுக்கு அத்தனை பேரும் துரத்தி வந்தானுங்க? எதுக்கு சுட்டானுங்க?” ஹஸ்கி குரலில் மாறியிருந்தாள். கூட்ட நெருக்கடியில் தொலைத்து விடாதிருக்க, தன் இரண்டு பைகளையும் கையில் இறுக்கி பற்றிக் கொண்டாள்.
”நீ இப்ப இந்த கூட்டத்தில ஊஞ்சலாடிட்டு இருக்கப்பவும் கதை கேட்கிற மூட்ல இருக்கிற போல?”
ஆமாம் என தலையசைத்தவளை ‘அற்ப ஜந்துவே’ எனப் பார்த்தவன்.
“ஆனா, நான் இப்ப கதை சொல்லுற மூட்ல இல்ல, எனக்கும் அந்தேரில தான் இறங்கணும், அதுக்கப்புறம் நீ யாரோ நான் யாரோ?”
மிட்டாய் கேட்ட பள்ளித் தோழனிடம் முகம் திருப்புவதைப் போல ரிஷாவிடமிருந்து முகம் திருப்பி நின்றுக் கொண்டான் இந்தர்.
“சொல்லாட்டுப் போ. எனக்கென்ன?”
ரிஷாவும் அவனைக் கண்டுக் கொள்ளவில்லை. அந்தேரி ஸ்டேஷன் வரவும் ஒருவர் முகத்தை ஒருவர் பாராமல் இறங்கினர்.


Leave a Reply