Epi 5_Thurathum Nizhalgal_Jansi

அத்தியாயம் 5 _ துரத்தும் நிழல்கள்_ஜான்சி

அத்தியாயம் 5

Rifel: மரைகுழல் துப்பாக்கி அல்லது புரிகுழல் துமுக்கி (rifle) என்பது ஒரு சுடுகலன் ஆகும். இது தோளில் வைத்து சுடுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டதும், அதன் குழலில் சுருளை வடிவில் புரி குடையப்பட்டிருக்கும். சுருக்கமாக, நீளமான குழாயும், அதன் உள்ளே சுருளை வடிவப் புரி குடையப்பட்டது மரைகுழல் துப்பாக்கி எனப்படும்.[1

*****

“அறிவில்ல உனக்கு? ஒதுங்கி நிக்காம ஓடி வர்ற, என் பின்னால அத்தனை பேரும் ஓடி வந்துட்டு இருக்காங்க… நான் என் உயிர காப்பாத்துறதா? இல்லை உன்னைப் பார்க்குறதா? இந்த பொண்ணுங்களுக்கே யாராவது ஹீரோ வந்து காப்பாத்தணும்னு நினப்பு.”

“ஆம்பளைங்க முன்னேறாம போறதுக்கு காரணமே இவங்கதான்… “

தன் முன் நின்றுக் கொண்டுவிடாமல் பொறிந்துக் கொண்டிருந்தவனை வெட்டவா குத்தவா? என ஆத்திரம் மிக முறைத்துக் கொண்டிருந்தாள் ரிஷா.

சட்டென்று அவளுக்கு பேச்சு எழவில்லை. இப்போது அவள் மனதிற்குள்ளாக பயம் எழுந்திருந்தது. ரயிலில் இருக்கும் போது ஷாரதாவுக்கும் அந்த முரடர்களுக்கும் நிகழ்ந்த அந்த வாக்கு வாதமும், ஷாரதாவின் தாக்குதல்களும் அதில் ஷாரதா தப்பிச் செல்லுவதையும் அவள் பார்த்திருக்க,  இனி எதுவும் ஆபத்து இல்லை என்று அவள் எண்ணியிருந்தாள்.

தன்னை நெருங்கி சட்டென்று பாய்ந்த அந்த தோட்டா குறித்து எண்ணுகையிலேயே அவள் உடல் சிலிர்த்து அடங்கியது.

யார் சுடுகின்றார்கள்? என்று எதிர்த்து நின்று பாராமல் மனதில் எழுந்த பயத்தை தாண்டி, இரண்டு பைகளையும் தூக்கிக் கொண்டு அவள் ரயில்வே போலீசாரை நோக்கி ஓடி வந்ததே அவளைப் பொருத்தவரையில் மிகப் பெரிய விஷயம்

அது தனக்கான ஆபத்து என்று ரிஷா எண்ணியிருக்க இந்த குள்ளக் கத்தரிக்கா தன்னை தர தரவென இழுத்துக் கொண்டு வந்து மும்பை லோக்கல் இரயிலில் ஏற்றி விட்டதோடு நில்லாமல், இவளிடம் வளவளவென்று அர்த்தமற்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, எதிரில் நின்று அர்த்தமற்று பேசுகின்றவனை ரப் ரப்பென ஐந்தாறு அறைகள் விட்டால்தான் என்ன? என கை துறுதுறுத்தது. தன் நிலை புரிந்து தன்னை அவள் அடக்கிக் கொண்டாள்.

பதில் பேசாமல் தன்னை முறைத்துக் கொண்டிருப்பவளைப் பார்த்திருந்தவன் ஒன்றும் குள்ளக் கத்தரிக்காய் எனும் அளவு இல்லை. ஐந்தேகால் அடியில் இருந்தான். மாநிறமும், உருண்டு திரண்ட புஜங்களும் கொண்டவனாய் சுருங்கச் சொல்லப் போனால் நீளமாக இல்லாமல் அகலமாக இருந்தான். இன்னும் சுருங்கச் சொல்லப் போனால் செவ்வகமாக இல்லாமல் சதுரமாக இருந்தான்

முட்டைக் கண்களும், சின்ன மீசையுமாய், வீராவேசமாய் பேசினாலும் அவன் முகமே, “ நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டஎனும் விதமாய் அவனை காலை வாரி விட்டுக் கொண்டிருந்ததை அவன் உணரவில்லையோ, என்னவோ?!

“என்ன நான் பேச பேச பதில் சொல்ல மாட்டேங்கிற? திமிரா?”

மறுபடி மறுபடி அவளிடம் எகிறினான். அமைதியாய் இருந்தால் அடங்கிப் போவார்கள் என்று பயப்புள்ளைக்கு யாரோ தப்பு தப்பா சொல்லிருப்பாங்க போலிருக்கு. “வொய் ப்ளட்? சேம் ப்ளட்வடிவேலாக மாறி மாத்து வாங்க போறது அவனுக்கு தெரியாமல் போயிற்று.

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!