Epi 5_Uyir Oviyam Nee

அத்தியாயம் 5_உயிர் ஓவியம் நீ

பகுதி 5

ஒரு வார காலமாக தனது ப்ரொஜெக்டில் தீவிரமாக ஈடுபட்டு ஒரு வழியாக அதனை வெற்றிகரமாக முடித்து சமர்ப்பித்து விட்டிருந்தார்கள் நுவலியும் அவள் தோழிகளும்.

அதிக பணப் புழக்கங்கள் இல்லாத குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் அவர்கள்.

அதே வகுப்பில் மற்றவர்கள் வெளியில் ப்ரொஜெக்டை செய்து வாங்கியது அவர்களுக்கு தெரியும் என்றாலும், இவர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு சொந்தமாக யோசித்து, AI ( Artificial Intelligence) மற்றும் Chat GPT உதவியில் ஓரளவு செம்மையாகவே தங்கள் வேலையை முடித்திருந்தனர்.

வழக்கம் போலவே சொந்த திறமைகளில் செய்யப்பட்ட ப்ரொஜெக்டுகள் கண்டுக் கொள்ளாமல் விடப்பட, வெளியில் செய்து வாங்கியவைகள் தன் மினுமினுப்பு, ஜொலிஜொலிப்பில் கவனமும் பாராட்டுகளும் பெற அது பழகிப் போனதில் பெண்கள் அதனை கண்டுக் கொள்ளவில்லை.

கெத்தாகத் திரியும் மனோஜ் குழு எப்போதாகிலும் தான் இவர்களை வட்டமிடுவது. மற்றபடி தென்றலாய் வருடும் புன்னகையை மனோஜ் நுவலியின் பக்கம் வீசிக் கொண்டே இருப்பான்.

காபேடேரியாவில் நுவலியின் அருகில் அமர்ந்து பேசுவான். இவளும் வெட்கி, நாணிக் கோணி எல்லாம் அமராமல் நிமிர்வாகவே பேசுவாள்.

இதுவரை அவன் காட்டிய ஆர்வங்களுக்கு சம்மதமாக ஒருமுறை கூட நுவலி பதிலளித்தது இல்லை.

ஏதோ நூற்றில் ஒரு பங்காக அவன் உண்மையாக இவளை நேசிக்கின்றவனாக இருந்தால் எதையாவது சொல்லி அவனை நோகடிக்க அவளுக்கு விருப்பம் இல்லை.

தான் செய்வது தவறோ? எனும் நெருடல் நுவலியிடம் உண்டு.

ஆம் என்று சொல்லத்தான் முடியாது. இல்லை என்று ஏன் நம்மால் சொல்ல முடியவில்லை? என அவள் குழம்பிக் கொண்டு இருக்க,

இதனால்தான் என்பது போல மனோஜ் எதிரில் அமர்ந்து அவளை பருகு பருகு என பருகிக் கொண்டு இருந்தான்.

‘என்ன திடீரென்று!’ என நுவலி யோசிக்க,

சூழ அவள் மற்றும் அவன் தோழமைகள் இல்லாததே அவன் செயலுக்கு காரணம் என்பது அவளுக்கு உரைத்தது.

உரிமையான அந்த பார்வைகளை தான் தனிமையாக இருக்கும் போது மட்டும் பார்ப்பது … உரிமை போன்ற உள்ளம் வருடும் பேச்சுக்களை அவளது தனிப்பட்ட உரையாடல்களில் மட்டும் பேசுவது … இவை எல்லாம் ஏன்? என நுவலியால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

ஒருவேளை இவள் பெயர் கெட்டுவிடக் கூடாதென எண்ணுகின்றானோ? இல்லை அவனது பெயர் கெட்டுவிடக் கூடாதெனவா? 

மறுபடி இவளை குழப்பத்திற்குள்ளாக வெற்றிகரமாக இழுத்து போட்ட மனோஜோ தன் நண்பன் வந்து அருகில் அமரவும் மிக இயல்பு போல தன் பார்வையையும், தொனியையும் நட்பாக மாற்றியவனாக பேசவாரம்பித்தான்.

அவனது நட்புகள் மற்றவர்களும் வந்துச் சேரவும் அரட்டைகள் ஆரம்பித்தன.

“ஏ மனோஜ், பர்த்டே பார்ட்டிக்கு வேறு யாரையும் கூப்பிடலையா?” வியன் மனோஜிடம் கேட்டான்.

‘யார் பர்த்டே?’ என்பதாக நுவலி ஏறிட்டு பார்க்க,

“வர்ற சனிக்கிழமை என் அண்ணா பையன் முதல் பிறந்தநாள். அட்ரஸ் அனுப்பி வைக்கிறேன். வீட்டுக்கு வந்திடு” என்றான் மனோஜ்.

“சரி” என்றவள் அத்தோடு அதனை மறந்தும் போனாள்.

Pages: 1 2 3


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!