Epi 6_Uyir Oviyam Nee

ஆக, அண்ணனின் மேற்படிப்பு விசயம் ஞாயிறு காலை முதல் இரவு வரை ஓடியதில், இரவு எப்போது பூகம்பம் வெடிக்குமோ? என்பது போல அப்பா மற்றும் அண்ணன் உரையாடலின் நடுவே நெஞ்சை பிடித்துக் கொண்டு இருந்ததில், சோலைப் பிசாசு எந்த ஜன்னல்…கதவு வழியாக ஊடுருவி நன்றாய் போய்க் கொண்டிருக்கும் பேச்சை திசை திருப்பி விடுமோவென திக் திக்கென இருந்ததில் சனிக்கிழமை மனோஜ் வீட்டில் சென்று வந்ததே நுவலிக்கு நினைவில் இல்லை.

அது அத்தனை பெரிய நிகழ்வாகவும் அவளுக்கு தோன்றி இருக்கவில்லை.

கல்லூரி வந்த பின்னரே அவள் மற்றவர் பேச்சின் மூலம் மனோஜ் வீட்டின் விழாவில் கல்லூரியில் ஆண்கள் முதலாய் யாரும் அழைக்கப் படவில்லை என அறிந்துக் கொண்டாள்.

மனோஜ் தன்னிடம் எத்தனையாக நடித்தான்? எண்ணியபோதே அவளுக்கு அருவருத்தது.

அப்படியானால், தங்களுக்குள் காதல் என்று தன் பெற்றோருக்கு அவன் சொல்லி இருக்க வேண்டும். அதனால் தான் அவனது தாய் அத்தனை பேசினார். 

அந்த பேச்சு அவனது அண்ணிக்கானது மட்டுமல்ல அவளுக்கும் உரியது என எண்ணியபோதெல்லாம் உள்ளும் புறமும் கூசினாள்.

மனோஜோ அதற்கடுத்த இரு நாட்களுக்கு அவளது அருகில் கூட வரவில்லை.

மூன்றாவது நாள் அவளது வாட்சப்பிற்கு அவன் செய்தி வந்தது, “ஹனி ஹவ் ஆர் யூ? நாளை நான் ரெசார்ட் செல்லலாமென இருக்கின்றேன். வருகிறாயா?”

செய்தியை பார்த்துக் கொண்டிருந்தவள் இவனுக்கு ஒரு முடிவு கட்டாமல் முடியாது எனும் முடிவிற்கு வந்தாள்.

அவள் எண்ணத்திற்குள்ளாக ஏராளமான திட்டங்கள் அணிவகுத்தன.

தொடரும்

Pages: 1 2 3


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!