Epi 11_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அத்தியாயம் 11_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 11

“ப்ளீஸ் கம் இன்” என லிண்டாவிற்கு வழி விட்டாள் சம்பூர்ணா.

“வந்தது யாரம்மா?” கணேசன் குரல் கொடுக்க,

“அத்தானை தேடி வந்திருக்கிறாங்கப்பா.” சொன்னவள் முன்னறையில் லிண்டாவை அமர வைத்து,

“ப்ளீஸ் ஹேவ் யுவர் சீட் லிண்டா, ஐ வில் கால் அத்தா… நாக்கை கடித்துக் கொண்டவள் ஆனந்த் முத்துராஜ்.” என பதிலிறுத்தாள்.

“ம்ம்” என தலையசைத்து ஒய்யாரமாய் அமர்ந்தவளது பொலிவில் அறையின் பொலிவு மங்கியதைப் போலொரு தோற்றம் எழாமல் இல்லை.

“வுட் யு லைக் டு ஹேவ் வாட்டர், காஃபி ஆர்…” இவள் தடுமாற,

“நோ தேங்க்ஸ்” என புன்னகைத்தவள் தனது பையில் இருந்து சீல் உடைக்காத தண்ணீர் போத்தலை எடுத்து, திறந்து குடிக்கலானாள். புன்னகையும் கூட மிக அளவாகத்தான் இருந்தது.

வெளிநாட்டவர்கள் சுகாதாரம் கருதி திறந்திருக்கும் எந்த பாத்திரத்திலோ, போத்தலிலோ தண்ணீர் வாங்கி அருந்த மாட்டார்கள் என அவள் அறிந்திருந்ததால் லிண்டாவின் செய்கை அவளுக்கு தவறாகப் படவில்லை. ஆனால், ஏனோ மனதின் போக்கில் ஏதேதோ எண்ணங்களின் பிரதிபலிப்பில் அவள் முகம் வாடி வதங்கி விட்டிருந்தது.

வரவேற்பறையில் லிண்டாவை அமர வைத்து பேசிக் கொண்டிருந்த சம்பூர்ணா முழுக்க முழுக்க உணவு மேசையில் அமர்ந்திருந்த விகாஷின் பார்வையில் இருந்தாள்.

விகாஷ் பேசுகின்ற விதம் வேண்டுமானால் விளையாட்டைப் போல இருக்கக் கூடும். ஆனால், அவன் மனிதர்களை படிக்கத் தெரிந்தவன். வியாபாரம் எனும் போது இந்த குணாதிசயம் இருந்தால் மட்டுமே யாராலும் குப்பை கொட்ட முடியும். டெல்லியில் ஒரு அப்பர் மிடில் கிளாஸ் வீட்டில் சாதாரணமாக அமர்ந்துக் கொண்டு அல்பை போல “இன்னும் இரண்டு கிளாஸ் பாயாசம் தா” ஏன சற்று முன் கேட்டவனின் நிகர மதிப்பு சிலபல கோடிகளில் என்றால் சட்டென்று நம்பத்தான் முடியாது. 

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!