Epi 13_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அத்தியாயம் 13_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 13

ஆனந்த் இலகுவாக வந்து நிற்க விகாஷ் அவனை மேலும் கீழுமாகப் பார்த்தான்.

“என்னடா?”

“இவ்வளவு நேரமா? லிண்டாவை கீழே போய் விடப் போனியே… கீழே போயிட்டு வந்தியா இல்லை ஹோட்டேல் வரை விட்டுட்டு வந்தியோன்னு நினைச்சேன்.”

“ஹாஹா இல்லைடா கீழே போயும் கூட அவதான் பேசிட்டே இருந்தா, ஆல்ஃபீ நேரமாச்சுன்னு சொல்லியும் அவ கேட்டாதானே? மும்பையில் நீ போகிற வேலை சக்ஸஸ் ஆனால், நம்ம ப்ராண்ட் (Brand)டிற்கு அவ மாடலிங்க்ல உதவ விரும்புகிறாளாம்.”

“இதெல்லாம் வேண்டாத வேலை ஆனந்த், நாம இதை செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என்று அவளுக்கு யார் சொன்னது?” இப்போது விகாஷின் குரல் உயர்ந்திருந்தது.

“நான் சொல்லவில்லையடா? எப்படி தெரிந்ததோ? இருந்தாலும் கூட அவ நாட்டில் நமக்கு அவ உதவினா தானேடா?”

“அதுக்காக? … அவள் செய்தவைகளுக்கெல்லாம் நீ ஏற்கெனவே மிகவும் அதிகமாகவே திருப்பி செலுத்தியாகி விட்டது ஆனந்த். இதை முதலில் நினைவில் வைத்துக் கொள்” இப்போதும் விகாஷின் குரல் உயர்ந்து ஒலித்தது.

இவர்கள் விஷயத்தில் ஒன்றும் புரியாமல் அல்லது புரிந்தும் புரியாமல் விழித்து நின்ற சம்பூர்ணாவை பார்த்ததும் ஆனந்த் நண்பனுக்கு பதிலளிக்காமல் அமைதியானான். அவன் பார்வை சென்ற திக்கில் பார்த்த விகாஷீம் இப்போது அமைதியானான்.

“சாரிமா பூர்ணா, சும்மா ப்ரெண்ட்ஸ் டாக் நாங்க சண்டைலாம் போடலை” என்றவனாக விகாஷ் விளக்கம் கொடுக்க, அவள் தட்டுத்தடுமாறி புன்னகைத்தாள்.

‘என்ன இலகுவாக இந்த ஆண்கள் சண்டையிடுகின்றனர், மறுபடியும் அடுத்த நொடியே பசை போல ஒட்டிக் கொள்கின்றனர்!’ என அவர்களை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆம் இப்போது இருவரும் அப்படித்தான் நின்றுக் கொண்டு இருந்தனர். தங்களுக்குள்ளே ஏதோ தணிந்த குரலில் பேசி முடித்து நிமிரவும் எதிரில் நின்றவள் பார்வையோ ‘நீங்க எப்பவுமே இப்படித்தானா? இல்லை இப்படித்தான் எப்பவுமா?’ என்பது போல் இருக்க, அவள் பார்வை கண்டு சிரித்து விட்டிருந்தனர்.

“டேய் ஆனந்த் உன் பாப்புவை என் வீட்டையும் டிசைன் செய்து தரக் கேட்டேன். எனக்குன்னா செய்ய மாட்டாங்களாம் வேலைக்கு போகணுமாம்” என நண்பனிடம் குறைப் படித்தான்.

“எப்பலருந்து வேலைக்கு போகணும் பாப்பு? என் வேலைக்காக பிரேக் எடுக்க வேண்டியதாச்சு போல அப்படித்தானே?” என்றவனிடம்

“ம்ம், அடுத்த மாசம் பத்தாம் தேதிக்கு ஜாயினிங்க் அத்தான்” என்றாள்.

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!