Epi 16_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அத்தியாயம் 16_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 16

ஆனந்தின் வீட்டு கிரகப் பிரவேசம் முடிந்து அது சார்ந்த வேலைகள் எல்லாம் என சம்பூர்ணாவை இழுத்துக் கொள்ள வீட்டை ஆனந்திடம் ஒப்படைத்து விட்டதால் மீதம் அவன் பார்த்துக் கொள்வான் எனும் சுதந்திர உணர்வு அவளை இலகுவாக எண்ண செய்தது. ‘ஹப்பாடா இத்தனை பெரிய பொறுப்பு எப்படியோ முடித்து விட்டேன்’ எனும் நிறைவுடன் இருந்தாள்.

அடுத்த சில வாரங்களில் வேலைக்கு சேர வேண்டி இருக்க அதற்கான தயாரிப்பிலும் இருந்தாள். எப்படியும் பள்ளியில் பரீட்சைக்கு அப்புறம் சில நாட்கள் விடுப்புகள் இருக்கும். இவள் பள்ளியில் நேரடியாக சேர வேண்டுமா இல்லை ஆன்லைன் க்ளாஸா? என இன்னும் இவளுக்கு தெரிவிக்கப் படவில்லை. இருந்த போதும் பள்ளிக்கு செல்லும் போது அணியும் வண்ணம் சில உடைகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என எண்ணிக் கொண்டாள். முன்பு வேலை பார்த்த இடத்தினின்று வந்த சம்பளப் பணம் அப்படியே செலவழிக்காமல் வைத்திருந்தாள். அதை எடுத்துக் கொண்டு ஷாப்பிங்க் செல்ல வேண்டியதுதான். சிலது ஆன்லைனில் வாங்கவும் திட்டமிட்டு இருந்தாள்.

அன்று வார இறுதி காலை உணவு நேரம் முடிந்து பேசிக் கொண்டு இருக்கவும் வழக்கம் போல சம்பூர்ணா தன் தந்தையிடம் ஏதோ பேசிக் கொண்டு இருப்பதை கண்டான்.

‘‘நோ யூஸ் அத்தான்” (ஒரு பிரயோசனமும் இல்லை அத்தான்)

என தன்னை இடித்துக் கொண்டு வந்தமர்ந்த பிரசன்னாவை என்னவென்று ஆனந்த் புருவமுயர்த்தி கேட்க,

“தே ஆர் வெரி க்ளோஸ்”(அவங்க இரண்டு பேரும் மிகவும் நெருக்கம்) உதட்டை பிதுக்கினான்.

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!