Epi 18_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அத்தியாயம் 18_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 18

முத்துராஜ் “அப்பா பாப்புவை எனக்கு கட்டிக் கொடுப்பாங்களான்னு மாமா கிட்ட
கேட்டுச் சொல்லுறீங்களா?” என கேட்டு நின்ற தன் மகனை ஏறிட்டுப் பார்த்தார்.

“இங்க உக்காருங்க தம்பி”

அருகில் அமர்ந்தவனிடம், “கணேசன் நிலம் விக்கிறதா சொல்லவும் கல்யாணத்துக்கு உண்டான செலவை நாம கொடுத்து உதவணும் என்று நான் அந்த நிலமெல்லாம் நாமளே வாங்கிக்கலாமுன்னு நினைச்சேன். என்ன இருந்தாலும் கணேசன் எப்பவும் பொறுப்பெல்லாம் முடிச்சிட்டு ஊருக்கு வந்து விவசாயம் பார்க்க போறேன்னு சொல்லிட்டு இருப்பான். சும்மா பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டான். அதனாலதான் நிலம் வாங்குறதா சொன்னது… நிலம் அவன் பேரில இருந்தா என்ன? நம்ம பேரில இருந்தா என்னன்னு தான் உன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன். பணம் உன் கிட்ட இல்லன்னா பரவாயில்ல அப்பா பார்த்துக்கிறேன்… அதுக்காகவெல்லாம் பாப்பாவை கட்டிக்கணும்னு இல்லப்பா”

சொன்னவரை கடுப்பாக பார்த்திருந்தான்.

“அப்பா…”

“சொல்லப்பா”

“நீங்க நிலம் விக்கிறதா சொன்னப்ப நான் கவனிக்கவே இல்ல…”

“ஏன் கவனிக்கல?” புருவம் சுருக்கினார்.

“அப்பா… அப்பா” விட்டால் அப்பா காலில் விழுந்து விடும் நிலையில் இருந்தான்.

“இப்ப பாப்பு கல்யாண பேச்சு நடந்தில்ல…”

“ஆமா”

“அதில் பாப்புக்கு விருப்பமில்லப்பா..”

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!