Category: 5.Manam Virumbudhe unnai unnai_Author Jansi
-

Epi 10_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 10_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 10 ஆனந்த் தனனை முறைத்துக் கொண்டு நிற்பதைக் கண்ட விகாஷ், “போடா இவனே தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்.இத்தனை அழகான பொண்ணை உறவில வச்சுட்டு முரட்டு சிங்கிளா சுத்துற? நான் கட்டிக்கிறேன்னு சொன்னாலும் முறைக்கிற?” “எங்க மாமா இந்த ஊருக்கு வந்தும் கூட வெட்டரிவா வீச்சருவா எல்லாம் வச்சிருக்காரு. அதெல்லாம் கதவுக்கு பின்னாடிதான் தொங்குது. நீ அவர் வீட்டு பொண்ணை கேட்டேன்னு சொல்லவும் உன் தலை…
-

Epi 9_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 9_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 9 சம்பூர்ணாவிற்கு மனதிற்கு மிகவும் சோம்பலாக இருந்தது. கடந்த சில மாதங்கள் ஆனந்த் அத்தானின் வீட்டை பார்வையிடுவதில், வடிவமைப்பதில் சென்று விட்டிருந்தது. இப்போது ஏறத்தாழ பணி முழுமையடைந்த தருணம். சின்னச் சின்ன வேலைகள் மட்டும் மீதம் இருந்தன. ப்ளம்பிங்க் மற்றும் எலெக்ட்ரிசிடி சார்ந்த வேலைகள் சில இடங்களில் மீதமிருந்தன. அத்தான் அனுப்பிய பணத்தால் இவளுக்கு இன்கம் டாக்ஸ் பிரச்சனை வந்துவிடுமோவென ஒரு பக்கம் பயம். இந்த அத்தானுக்கு வேறு…
-

Epi 8_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 8_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 8 சம்பூர்ணாவின் பணிக்காலம் முடிந்து அடுத்த இரண்டு நாட்களில் ஆனந்தின் வீட்டு வேலைகள் ஆரம்பித்து இருந்தன. இரண்டு ஃப்ளாட்டுகளை வாங்கி ஒன்றிணைத்து அவன் ஒரு வீடாக அமைத்த அந்த புத்திசாலித்தனத்தை சம்பூர்ணா வியக்காமலில்லை. ஆனந்த் ஏற்கெனவே காண்டிராக்டருடன் பேசி வீட்டின் அடிப்படை அமைப்பு எப்படி என விளக்கி இருந்தான்தான். ஆனாலும், வீட்டின் உள்கட்டமைப்பு எப்படி அமைய வேண்டும் என சம்பூர்ணா தீர்மானிக்க வேண்டும் எனச் சொல்லி அவன் அவள்…
-

Epi 7_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 7_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 7 ஃபேஷன் உலகில் ஐந்து முக்கிய நிகழ்வுகள் உள்ளன, அவைகள் பாரிஸ் ஃபேஷன் வீக், மிலன் ஃபேஷன் வீக், நியூயார்க் ஃபேஷன் வீக், லண்டன் ஃபேஷன் வீக் மற்றும் அரபு ஃபேஷன் வீக் ஆகியவைகளாகும். இவைகளுள் மிகவும் பிரபலமான ஃபேஷன் வாரங்களில் வான்கூவர் ஃபேஷன் வீக், விவ்ஸ் வேர்ல்ட் ஃபேஷன் வீக், ரஷ்யாஃபேஷன் வீக் ஆகியவையும் அடங்கும்.உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அல்லது வருடத்திற்கு இரண்டு முறைகள் பேஷன் வாரங்கள்…
-

Epi 6_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 6_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 6 மறுநாள் காலை சம்பூர்ணா தூக்கம் கலைந்து எழுந்த போது என்னமோ காலச்சக்கரத்தில் திரும்பச் சென்று வந்தது போலொரு அயர்வு. சீக்கிரமே எழுந்து வேலைகளை முடித்து தனக்கான இஞ்சி டீயை எடுத்துக் கொண்டு அந்த டைனிங்க் டேபிளில் அமர்ந்த போது தன்னையறியாமல் மனதிற்குள்ளாக ‘ஆனந்த் அத்தான் அன்றைக்கு இந்த சேரில் தானே அமர்ந்திருந்தான்’ என மனம் முனகியது. எத்தனை ஆசை ஆசையாக அவனை பார்க்க காத்திருந்தாள். அவன் வந்ததும்…
-

Epi 5_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 5_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 5 தன்னால் குழந்தைகளை வளர்த்து கொண்டு, வேலையையும் செய்ய முடியும் என்று கணேசன் தன்னம்பிக்கையாக சொன்ன போதிலும் அவர் அதை செயல்படுத்த முன்பாக வெகுவாக துன்புற்று போனார். முதல் ஐந்து வருடங்கள் எப்படி கடந்தது என சொல்லவே முடியாது. அவரது வேலை மாற்றல்கள் ஒரு பக்கம், மகளின் படிப்பு, சிறு குழந்தையான பிரசன்னாவின் வளர்ப்பு என மிக சிரமமான வருடங்கள் அவை. சமையலுக்கு ஒரு வேலையாளையும், குழந்தையை பார்த்துக்…
-

Epi 4_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 4_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 4 வழக்கம் போல ஊருக்கு வரும் மகிழ்ச்சியோடு தான் ஆனந்த் வந்திருந்தான். அம்மாவிடம் உடல் நலனை விசாரிக்கும் போதெல்லாம் அதெல்லாம் பரவாயில்லமா என அவர் அந்த பேச்சை தள்ளிப் போடுவதை கூட புரியாத முட்டாளாக தான் இருந்ததை எண்ணி ஆனந்த் தன்னை நொந்துக் கொண்டு அமர்ந்திருந்தான். நோயுற்று படுத்து கிடக்கும் அன்னையை பார்க்கையில் அந்த வீடு அவர் முன்பு சுறுசுறுப்பாக வளைய வந்த போது இருந்த உயிர்ப்பில்லாமல் இருண்டு…
-

Epi 3_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 3_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 3 சாயங்கால நேரம் அப்பா வீட்டிற்கு வரவும் சம்பூர்ணா கதவைத் திறந்து அவரை வரவேற்றாள். கதவை திறக்கும் சப்தம் மற்றும் அப்பா வேலையில் இருந்து திரும்ப வந்துவிட்டதான சப்தங்கள் கேட்டதும் பிரசன்னா எழுந்து தனது வீட்டு பாடங்களை எழுத ஆரம்பித்தான். சம்பூர்ணா அதுவரை தவிர்த்து கொண்டிருந்த அந்த பேச்சு அவர்களின் இரவு உணவின் போது வந்து விட்டது. “சம்பூ ஆனந்த் தம்பி உனக்கு நிறைய புகைப்படங்கள் அனுப்பி வைத்து…
-

Epi 2_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 2_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 2 மதியத்திற்குள்ளாக சம்பூ எனும் சம்பூர்ணா நடத்த வேண்டி இருந்த வகுப்புகள் நிறைவுற்று இருந்தன. அன்றைய தினம் வெகு நாட்களுக்கு பின்னர் வீட்டில் தம்பி இல்லாமல் தனித்து இருக்கவும் என்னமோ போல் இருந்தது. எதையாவது உண்ண கேட்டுக் கொண்டோ, இல்லை தன்னிடம் வம்பிழுத்துக் கொண்டோ இருக்கின்ற பிரசன்னா இன்று பள்ளி செல்லவும் அவளுக்கென உருவானது அந்த சின்னதான தனிமை வெளி. தனிமையை எதிர்கொள்வது மிகவும் சவாலான விஷயம் தான்.…
-

Epi 1_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 1_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 1 “பாப்பூ, அழக்கூடாது என்ன?” தேம்பிக் கொண்டிருந்த அந்த பத்து வயது சிறுமியின் முகத்தை வருடி, தலையை கோதிய அவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான். புன்னகைத்த வண்ணம் புரண்டு படுத்தவளோ, தனது படுக்கையில் கைகளை துழாவி அருகிருந்தவனை இறுக்கி கட்டிப் பிடித்தாள். அவள் அணைப்பில் அகப்பட்டுக் கொண்டு இருந்தவன் திமிறினான். அவன் தன்னை விடுவிக்க பார்த்தும் முடியாமல், அவளை எட்டி உதைத்ததில் அவள் உடனே தனது கனவு கலைந்து…
