Epi 10_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“அதிசயம் நாலு வார்த்தை தமிழ்ல பேசிட்ட போ, போன்ல பேசறப்ப இங்கிலிஷ்லதான் பீட்டர் விடுவ”

“ஆக்சுவலி அத்தான் ஐயாம் வெரி மச் கம்ஃபர்டபிள் இன் இங்கிலிஷ் தேன் தமிழ் சோ….” (அத்தான் எனக்கு ஆங்கிலம் தான் தமிழை விடவும் இலகுவானது அதனால்… ) இழுத்தவன் பார்வை அங்கிருந்த இன்னொருவனை ஆராய்ந்தது.

“அத்தான் வாட் இஸ் ஹீ டூயிங்க்?” (அத்தான் இவர் என்ன செய்யறார்?) எனக் கேட்டான்.

பிரசன்னா கேட்டது விகாஷை குறித்துதான். ஏனென்றால் அவன் அவர்கள் வீட்டு கதவின் பின்னால் ஆனந்த் சொன்ன அரிவாள்களை தேடிக் கொண்டு இருந்தானல்லவா?

“டேய் என்னடா பண்ணுற?” ஆனந்த் நண்பனிடம் கேட்க,

“நீ தானே அரிவாள் எல்லாம் இருக்குன்னு சொன்ன?”

“ஓ யூ ஆர் லுக்கிங்க் ஃபார் அரிவாள்? ஐ வில் டேக் யூ தெர்” நீங்க அரிவாளை தேடுறீங்களா? வாங்க காண்பிக்கிறேன் என விகாஷை அழைத்துக் கொண்டு சென்றான்.

“இது கதிர் அரிவாள், இது வீச்சரிவாள், உள்ளே மம்பட்டி கூட இருக்கு… மை அப்பா லைக் ஆல் ஃபார்மிங்க் ரிலேடட் திங்க்ஸ் யூ நோ?” (எங்கப்பாவிற்கு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருட்கள் மிகப் பிடிக்கும் தெரியுமா?)

கதிகலங்கி போய் நின்ற விகாஷ் ஆனந்த் அருகில் வந்து பத்திரமாக நின்றான்.

அவர்கள் அருகில் வந்து நின்ற சம்பூர்ணா,

“அத்தான் நீங்க இரண்டு பேரும் அந்த அறைக்கு பெட்டி கொண்டு போங்க, ஃப்ரெஷ் ஆகிக்கோங்க. அந்த ரூம்ல ஒரு பாத்ரூம்தான் இருக்கு. ஒருத்தங்க அப்பா பாத்ரூமை உபயோகிச்சுக்கோங்க.”

“சரி பாப்பு”

“அண்ணா வாங்க” என அவனையும் அழைத்தவளாக சம்பூர்ணா முன் செல்ல, 

‘என்னது அண்ணாவா? வடைப் போச்சே’ எனும் முக பாவனையோடு சம்பூர்ணாவை பின் தொடர்ந்த விகாஷை ஆனந்த் அடக்கி வைத்த சிரிப்போடு பார்த்திருந்தான்.

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!