Epi 10_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“ஒவ்வொரு அரிவாளும் இத்தனை நீளம், மம்பட்டி வேற இருக்காம். இதையெல்லாம் பார்த்தும் கூட நான் இந்த வீட்டுப் பொண்ணு மேல ஆசைப் படுவேன்னு நினைக்கிற, இப்பலருந்து நான் உன் பாப்புக்கு அண்ணாதான்…” கெத்தாகச் சொல்லி அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

இருவரும் சற்று நேரத்தில் சுத்தம் செய்து வெளியே வந்து பொதுவாக பேசிக் கொண்டு இருந்தனர். காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரம் என்பதால் குளிர்பானம் சிற்றுண்டி என விருந்தினருக்கு கொடுத்தவளிடம் வாங்கிக் கொண்டனர்.

மதிய உணவிற்கு பின்னர் தனது வீட்டை பார்வையிட்டு வரவேண்டும் என ஆனந்த் தீர்மானித்து இருந்தான். பொதுவான அரட்டைகள் நிகழ்ந்துக் கொண்டு இருந்தன.

“பெருந்தொற்று காலத்தில் உங்கள் வேலை எல்லாம் எப்படி நடக்கும் தம்பி?” கணேசன் விசாரிக்க,

“சிரமம்தான் மாமா, பார்வையாளர்களை அனுமதிக்காமல் இணையம் மூலமாகத்தான் கடந்த வருடம் நடத்தினோம்… இப்போதும்…”

பேச்சு தொடர்ந்தது, புரிந்த வரைக்கும் விகாஷீம் பதிலளித்தான் இல்லை என்றால் பிரசன்னாவுடன் பேசிக் கொண்டு இருந்தான்.

கணேசனின் தமிழை புரிந்துக் கொள்வதை விடவும் பிரசன்னாவுடன் பேசுவது இலகுவாக இருந்தது.

‘அப்பா பேசிக் கொண்டு இருக்கும் போது நடுவில் எவ்வாறு பேச?’ என தயங்கி நின்றுக் கொண்டு இருந்தவளை ஆனந்த் கண்டுக் கொண்டான்.

“என்ன பாப்பு?” 

“அத்தான் உங்க மெயில் ஐடி தெரியாது, அதனால எல்லா விபரமும் இந்த டைரியில் எழுதி வச்சிருக்கிறேன்.” என ஒரு சின்ன டைரியை அவனிடம் நீட்டினாள். இரண்டு இலட்சத்து சொச்ச ரூபா என் அக்கவுண்ட்ல இப்பவும் இருக்கு. உங்க அக்கவுன்ட் விபரம் தந்தீங்கன்னா நான் அனுப்பிடுவேன். எனச் சொன்னவளை விகாஷ் சுவாரஸ்யமாக பார்த்தான்.

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!