“நீயும் உட்கார்ந்து சாப்பிடேன் பாப்பு?” என ஆனந்த் சொல்லவும்,
“அவ அப்புறமா சாப்பிடுவா தம்பி, நீங்க வேண்டியதை வாங்கி சாப்பிடுங்க” என்றார்.
“எனக்கு கொஞ்சம் பொரியல் வைமா” என தனது அருகில் இருந்த பொரியல் சட்டியில் இருந்து பறிமாற மகளை அழைத்தார்.
“சரிப்பா” என அவளும் பறிமாறுகையில் தான் கதவின் மறுபக்கம் இருந்து யாரோ அழைப்பு மணியை அழுத்துவது கேட்டது.
“இதோ யாரென்று பார்த்து வருகின்றேன்” என அவள் வாசலை நோக்கி விரைந்தாள்.
வாசலில் நின்ற வெளி நாட்டவளை பார்த்ததும் வழி மாறி வந்து விட்டார்கள்
போலும் என எண்ணியவளாய்,
“யெஸ் ப்ளீஸ்” என்றாள்.
“ஹே மை நேம் இஸ் லிண்டா, இஸ் ஆனண்ட் முட்டுராஜ் கேம் ஹியர்?” எனக் கேட்டாள்.
அந்த பளிச்சிடும் தேகம், மிக அழகான முகம் பல வருடங்கள் முன்பு தான்
வீடியோ காலில் பார்த்த தருணம் நினைவிற்கு வர மறந்து போன சில நினைவுப்
பெட்டகங்கள் திறக்க சம்பூர்ணா அதே பதினெட்டு வயதின் படபடப்பிற்கு
உள்ளானாள்.
எதிரில் இருந்தவளும் கூட, அவள் பார்வையில் குளுமை இருந்தாலும் “இவள் தானே அவள்?” எனும் துவேஷத்தை மனதில் மறைத்து சம்பூர்ணாவை பார்த்திருந்தாள்.
தொடரும்

