Epi 10_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“சூப்பரு, விகாஷ் உன் வேலையை முடிச்சிட்டு அடுத்த வாரம் நம்ம வீட்டு கிரகபிரவேசத்துக்கு வந்திட்டுதான் போகணும்.”

“டேய், நான் மும்பையில் இருந்து டைரக்டா மிலானுக்கு டிக்கெட் போட்டுட்டேனே?”

“இதெல்லாம் பெரிய காரணமா? டிக்கெட் கேன்சல் செய் வேற வாங்கு. என்னடா பிரசன்னா?” பெரிய மனிதனைப் போல அவனிடம் இவன் கேட்க,

“யெஸ் அத்தான் யூ ஆர் ரைட்” என ஆமோதித்தான் அந்த பெரிய மனிதன்.

“அத்தான்” சம்பூர்ணா நெளிந்த வண்ணம் நின்றிருக்க,

“என்ன பாப்பு?”

“எதுக்கும் நீங்க ஒரு முறை பார்த்துட்டு முடிவு செய்ங்க… ஏதாச்சும் சரி செய்ய வேண்டி இருந்தா?”

“அதெல்லாம் நீ சொன்னா சரியாதான் இருக்கும்” ஆனந்த் அவள் கேள்வி அர்த்தமற்றது என உணர்த்தினான்.

மகள் சகஜமாக பேசியது உறுத்தியதோ என்னமோ கணேசன் அவளிடம்,

“சம்பூ மதிய சாப்பாடு எடுத்து வை. தம்பி சாப்பிட்டுட்டு வீட்டை பார்த்துட்டு வரட்டும்.” என அதிகாரமாகச் சொன்னார்.

“சரிப்பா” இருக்கையை விட்டு அவள் அவசரமாக எழுந்துக் கொண்டாள். கணேசன் மாமா தனது மகளை நடத்தும் விதம் ஏனோ ஆனந்திற்கு அவ்வளவு உவப்பாக இல்லை. 

‘என் பாப்புவின் சிறகுகளை கட்டிப் போட்டு விட்டாரா? இல்லை வெட்டியே விட்டாரா?’ எனத் தோன்றியது. ‘அவள் முன் போல கலகலத்து பேசவே காணோமே?’ இவன் மனம் வருந்தியது.

மதிய உணவு நேரம் அப்பப்பா நாவிற்கு சுவை கூட்டும் அத்தனை பராம்பர்ய உணவுகள்.

“எல்லாமே வெஜ்ஜா?” ஆனந்த் கேட்டான்.

“அண்ணா இன்னிக்கு நான் வெஜ் சாப்பிட மாட்டாங்கன்னு அப்பா வெஜ் சமைக்கச் சொன்னாங்க அதனாலத்தான்…” என இழுத்தாள். மராத்தி மக்கள் வாரத்தில் மூன்று நாட்கள் இறைச்சி உணவு சாப்பிடுவதில்லை என அறிந்து மகளிடம் சொல்லி இருந்தார்.

‘இந்த பக்கி செவ்வாக்கிழமை விரதம் எல்லாம் எப்பவோ விட்டுட்டானே? எல்லா நாளும் அசைவம் தின்கிறவனுக்கு வெஜ் ட்ரீட்டா? நல்லது நல்லது’ என விகாஷை ஆனந்த் பார்க்க,

விகாஷ் அந்த மணமணக்கும் சாம்பாரில் இலயித்து அவியல் பொரியலில் முங்கி நீச்சல் அடித்துக் கொண்டு இருக்க,

“பரவால்லமா இந்த சாப்பாடு சாப்பிட கொடுத்து வச்சிருக்கணுமே. எல்லாமே ரொம்ப ருசியா அருமையா இருக்கு. என்னோட இலை பக்கத்தில பாயாசம் மட்டும் இன்னும் இரண்டு கிளாஸ் எடுத்து வைச்சிரணும்” என்றான்.

“சரிண்ணா” என்றவள் ஆனந்திடம்,

“ராத்திரிக்கு பொறிக்க மீன் வச்சிருக்கேன் அத்தான்” என சமாதானம் சொல்லவும் விகாஷை பார்த்து ஆனந்த் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

“நான் இந்தியா வந்த சகுனம் சரியில்லடா” என விகாஷ் மராத்தியில் ஆனந்திடம் சொல்ல,

“என்ன?” ஆனந்த் கேட்டான்.

“ஒன்னுமில்லமா சாப்பாட்டு ருசியில் தன்னையறியாமல் தாய் மொழியில் பேச ஆரம்பிச்சுட்டான். இல்லைடா?” என நண்பனிடம் கேட்டான்.

“ம்ம்” என்றவனாக விகாஷ் தலையசைத்து, “இங்க கொஞ்சம் சாம்பார் ஊத்தும்மா என சோற்றின் நடுவில் பள்ளம் தோண்டலானான்.

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!