Epi 12_Thurathum Nizhalgal_Jansi

அவன் உள்ளத்தில் எழுந்த புதுமையான உணர்வுகளோடு கூட ஊரிலிருந்து வந்த உறவினர்களும், பெரியவர்களும் அவனிடம் வந்து “உனக்கென்னப்பா மச்சக்காரன்டா நீயி, சென்னையிலே இவ்வளவு அழகான மாமன் மகள்”, உனக்குத்தானே கட்டி வைக்க போறாங்க’ என வித விதமாய் கற்பனைக் கோட்டைகளை அவன் மனதில் கட்டிச் சென்றனர்.

இருபது வயதைக் கூட நெருங்காத அந்த கிராமத்து வாலிபனின் மனதில் மனைவியாகவே வேரூன்றினாள் ரிஷா. 

அந்த வேர் விருட்சமாகி பலர் வாழ்வை கேள்விக்குரியதாக மாற்றப் போவதை அறியாமல் விழாவின் களைப்பில் அம்மாவின் மேல் கால்களைப் போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டு இருந்தாள் ரிஷா.

பூப்புனித நீராட்டு விழா முடிந்ததும் வழக்கம் போல பள்ளிச் செல்ல ஆரம்பித்தாள் ரிஷா.  நடந்த நிகழ்வுகளில் தானாகவே கூச்சம் வந்துச் சேர்ந்தது. யாரையும் முன் போல சகஜமாக பழகவே அவளுக்கு மிக நாட்கள் எடுத்தன.

பெரியவள் ஆனதும் அவளுக்கு வீட்டில் கிடைத்த கவனிப்பில், விசேஷமான சாப்பாட்டில் இன்னும் மெருகேறினாள். பதின்ம வயதின் அழகில் அவள் தேகம் பொன்னென மின்னிக் கொண்டிருந்தது. முன்பை விட அதிகமாக அவள் எங்கே சென்றாலும் கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. சேட்டையையும், துறுதுறுப்பையும் கூட தானாகவே அவள் குறைத்துக் கொண்டாள்.

அப்பாவின் மடியிலெல்லாம் அமர இப்போது அவளுக்கு அனுமதி இல்லை. கிராப்பாக இருந்த முடி வளர்ந்து, ரெட்டைச் சடை மடிப்பு நீண்டு தோளைத் தாண்டியது கூட இப்போது அவளுக்கு மகிழ்ச்சி தந்தது. 

முன்பு போலல்லாமல் அம்மாவின் கட்டுப்பாடுகளுக்கு அவள் உடன் பட்டாள். மரங்களின் கீழே விளையாடுவதை விட்டு விட்டாள். இப்போது அவளோடு விளையாட வீட்டிற்கு கணேஷ், பிரேமா, கீர்த்தி வந்துச் செல்வார்கள்.

ஞாயிறுகளில் தன் வீடு வரும் சுந்தரிடம் மற்றவர்களைப் போலவே பேசுவாள். அம்மா இல்லாத தருணத்தில் டீயோ, சாப்பாடோ பரிமாறுவாள். 

சுந்தருக்கோ அவள் முன் போல இல்லாவிட்டாலும் அவளில் உருவத்தில் மற்றும் பழக்க வழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மென்மேலும் பிடித்தது. மனதில் அவளோடு கணவனாகவே குடும்பம் நடத்த ஆரம்பித்தான் அவன்.

அவளை குழந்தை என்ற மனப் பான்மையோடு மற்றவர்கள் பார்த்தவண்ணம் அவனால் ஒரு போதும் பார்க்க முடியவில்லை. சில மாதங்கள் கழித்து ஒரு நாள் அவனுக்கு மனதிற்குள்ளாக ஒரு உந்துதல் எழுந்தது. 

தான் அவளை நேசிப்பது போலவே அவளும் தன்னை நேசிக்கிறாளா? இல்லையா? என சோதித்துப் பார்க்க விரும்பினான்.

அன்று தன் வேலை முடிந்ததும் மாமா வீட்டிற்குள் சென்றான். அங்கு ரிஷா தன் பூனைக் குட்டிகளோடு விளையாடிக் கோண்டு ஹோம் வொர்க் செய்துக் கோண்டிருந்தாள்.

டிவி ரிப்பேர் செய்யும் ஆள் வந்து சரி செய்துக் கொண்டிருந்தார் எல்லா வயர்களும் பிரிந்துக் கிடந்தன. செல்வி மகளுக்கு அந்தப் பக்கம் போக வேண்டாமென அறிவுறுத்திச் சென்றிருந்தார். 

டிவி மெக்கானிக் தான் முக்கியமான எதையோ எடுத்து வருவதாகவும், அதுவரை இங்கே யாரும் வராமல் பார்த்துக் கொள் எனச் சொல்லி அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். 

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!