சுந்தரைக் கண்டதும் ரிஷா முறுவலித்து விட்டு எழுதுவதை தொடர்ந்தாள். அவன் அவளொடு பேச மிகவும் ஆவலோடு வந்திருந்ததால் ஏதேதோ கேள்விகள் கேட்க, அவனுக்கு உரிய பதிலும் சொல்லி வைத்தாள்.
அவனுக்கு டீ கொடுக்க வந்த செல்வி, வெளியே ஏதோ வேலையாய் சென்று விட்டார், வாசலில் யாரோ வந்து விபரம் கேட்க, அம்மா வெளியே சென்றதால் தன் புத்தகங்களை விலக்கி வைத்து விட்டு, வாயிலுக்குச் சென்று பதில் சொல்லி விட்டு வீட்டிற்குள் வந்தாள் ரிஷா.
அதுவரை டீ குடித்துக் கொண்டிருந்த சுந்தருக்கு அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தோன்றியது. டீ டம்ப்ளரை டேபிளில் வைத்து விட்டு எழுந்தவன் மின்சார இணைப்புப் பெற்ற வயர்கள் இரண்டை கையில் வைத்துக் கொண்டு ரிஷா பார்க்க நின்றான்.
“அத்தான் அங்கே எதுக்கு போனீங்க?, இங்கே வாங்க… ஷாக் அடிக்கும்…”
அவளது அழைப்பில் சுந்தருக்கு உள்ளம் குளிர்ந்தது … ஆனால், இது மட்டும் போதாதே…
இரண்டு வயர்களும் சேர்த்து தன் விரல்களில் வைத்தான் அவன், ரிஷா அவனுக்கு கரண்ட் ஷாக் அடிப்பதைக் கண்டு துடித்தாள்.
“ஐயோ வேண்டாம் அத்தான் வயரை கையிலிருந்து எடுங்க… எடுங்க?”
அவளது துடிப்பைக் கண்டு குரூரமாய் விரிந்தன சுந்தரின் அதரங்கள், காதல் எனும் பெயர் கொண்ட ராட்சசன் வன்மையாக சுந்தரின் மனதில் தடம் பதித்து இருந்தான்.
அந்த அரக்கனுக்கு தனக்காக தன் மாமன் மகள் துடிப்பது மிகவும் பிடித்திருந்தது. மீண்டும் மீண்டும் தனக்கு குட்டி குட்டியாய் ஷாக் வைத்துக் கொண்டே இருந்தான்.
ரிஷாவின் துடிப்பு ஒவ்வொன்றும் அவன் மனதிற்கு இதம் பாய்ச்சிக் கொண்டே இருந்தது. கண்களில் விபரீதமான ஒளி கூடியது.
தொடரும்


Leave a Reply