Epi 14_ Manam Virumbudhe unnai unnai_Jansi

‘இங்கே ட்ராஃபிக் ரொம்ப அதிகம் தம்பி, கொஞ்சம் சீக்கிரம் புறப்படணும்” 

“சரிங்க மாமா” என்றான்.

காலை உணவு அமைதியாக கழிந்தது. உளுந்து வடையுடன், தோசையும் என்பதால் இருவருக்கும் அவ்வப்போது சுட்டு சுட்டு வந்து கொடுத்துக் கொண்டு இருந்தாள். தாங்கள் உண்டதும் கணேசன் எழுந்து கை கழுவி முன்னறைக்குச் செல்ல ஆனந்த் கை கழுவி அந்த உணவு மேஜையிலேயே அமர்ந்திருந்தான். அவளையும் சாப்பிட வைக்கும் வரையில் அவன் எழுந்திருக்கவில்லை.

தனியாக சாப்பிட நேராமல் கூட ஒருவர் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதே சம்பூர்ணாவிற்கு இதமாக இருந்தது. அவர்கள் இத்தனை காலம் பேசவே இல்லை என மறந்து போனது போலொரு சகஜமான பேச்சு இருவருக்குள்ளும் இருந்தாலும் அவை குளத்தின் மேற்புரம் மின்னும் அலைகள் போல இருந்தனவே அன்றி குளத்தின் ஆழத்தில் கிளறப்பட வேண்டியவைகள் சில இருந்தனவே?

“மாற்றி மாற்றி வேலையா இருக்கே பாப்பு? இப்ப என்ன அடுத்து மதிய சமையலா?”

“ம்ம்” தலையசைத்தாள்.

“போரடிக்கலை”

“வீட்டில இதுதான் ஒரு நேரப்போக்கு அத்தான், எனக்கு சமைக்க ரொம்ப பிடிக்கும்.”

“ம்ம்” ஆனந்திற்கு அவள் சொல்வது சொல்லாமல் விட்டது எல்லாம் புரியாமல் இல்லை.

Pages: 1 2 3 4 5 6 7

error: Content is protected !!